சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 30 June 2025

வரலாற்றில் பொறியியல்


 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைய பாரசீகர்கள் பாலைவனத்தை சொர்க்கமாக மாற்றிய ஒரு அதிசயத்தை வடிவமைத்தனர் - கனாட் அமைப்பு. இந்த மறைக்கப்பட்ட நிலத்தடி சுரங்கப்பாதைகள் மலை நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை வழிநடத்தி, மிகவும் விரோதமான சூழல்களில் பசுமையான தோட்டங்களையும் விவசாய நிலங்களையும் உருவாக்கின.


அச்செமனிட் பேரரசின் (கிமு 550-330) போது கட்டப்பட்ட இந்த ஈர்ப்பு விசையால் இயங்கும் நீர் நெடுஞ்சாலைகள் பூமிக்கு அடியில் மைல்களுக்கு நீண்டிருந்தன. கவனமாக பொறியியல் மூலம், அவை நிலத்தடி நீர்நிலைகளைத் தட்டி, இல்லையெனில் வாழத் தகுதியற்ற வறண்ட பகுதிகளுக்கு விலைமதிப்பற்ற தண்ணீரை வழங்கின.


முடிவுகள் அசாதாரணமானவை - பசுமையான சோலைகள் தரிசு பாலைவனத்திலிருந்து தோன்றி, கோதுமை, பார்லி, பேரீச்சம்பழம் மற்றும் மாதுளை போன்ற பயிர்களை நிலைநிறுத்தின. வாழ்க்கை சாத்தியமற்றதாகத் தோன்றிய இடங்களில் முழு நாகரிகங்களும் செழித்து வளர்ந்தன. கனாட் அமைப்பு வட ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயின் மற்றும் தென் அமெரிக்கா வரை கண்டங்களில் பரவியது.


இன்று, இந்த பண்டைய நீர்வழிகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்படுகின்றன, இது அவற்றின் கட்டுமானர்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமைக்கு சான்றாகும். பூமியின் மிகக் கடுமையான சூழல்களை மிகுதியான தோட்டங்களாக மாற்றியமைத்து மனிதகுலத்தின் மிகப்பெரிய பொறியியல் சாதனைகளில் ஒன்றாக கானாட்கள் இன்னும் உள்ளன.

ஆதாரங்கள்: யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையம், உலக வரலாற்று கலைக்களஞ்சியம், நீர் வரலாறு

Sunday, 29 June 2025

உயிருடன் இரு

 “என்ன நடந்தாலும், உயிருடன் இரு.

உயிரிழப்பதற்கு முன் இறக்காதே.

உன்னை இழக்காதே, நம்பிக்கையை இழக்காதே, திசையை இழக்காதே. உயிருடன் இரு, உன்னுடன், உன் உடலின் ஒவ்வொரு செல்லுடனும், உன் தோலின் ஒவ்வொரு நாருடனும்.


உயிருடன் இரு, கற்றுக்கொள், படி, சிந்திக்க, படிக்க, கட்டமைக்க, கண்டுபிடிக்க, உருவாக்க, பேச, எழுத, கனவு காண, வடிவமைக்க.


உயிருடன் இரு, உனக்குள் உயிருடன் இரு, வெளியேயும் உயிருடன் இரு, உலகின் வண்ணங்களால் உன்னை நிரப்பிக்கொள், அமைதியால் உன்னை நிரப்பிக்கொள், நம்பிக்கையால் உன்னை நிரப்பிக்கொள்.


மகிழ்ச்சியால் உயிருடன் இரு.


வாழ்க்கையில் நீ வீணாக்கக்கூடாத ஒரே ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் வாழ்க்கை..."

வர்ஜீனியா வூல்ஃப்

வரலாற்றில் பெண்கள்



உலகத்தில் தொழிற்புரட்சி நடந்த வளர்ந்த நாடாக இருந்தாலும், பின்தங்கின நாடாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் பெண் கல்வி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்திடவில்லை. நிறைய போராட்டங்களுக்குப் பின்னரே அவர்களால் கல்வி நிலையங்களுக்குள்ளேயே நுழைய முடிந்தது. 

 1847 ஆம் ஆண்டு ஜெனீவா மருத்துவக் கல்லூரியில் 150 ஆண் மருத்துவ மாணவர்கள் எலிசபெத் பிளாக்வெல்லை சேர்க்க வாக்களித்தபோது, ​​அவர்களில் பலர் அதை வெறும் ஒரு குறும்பு என்று நினைத்தனர்.

அந்த நேரத்தில் பெண்களுக்கு முற்றிலும் மூடப்பட்டிருந்த ஒரு துறையான மருத்துவப் படிப்புக்கு எலிசபெத் விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தை எவ்வாறு கையாள்வது என்று தெரியாத ஆசிரியர்கள், அதை மாணவர் வாக்கெடுப்புக்கு வைத்தனர், ஒருவேளை நிராகரிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம் அல்லது ஓரளவுக்கு அதை ஒரு விளையாட்டுத்தனமான செயலாகக் கருதலாம்.

ஆனால் எலிசபெத் பிளாக்வெல் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற தனது ஆசையில் மிகவும் தீவிரமாக இருந்தார்.

அவர் மிகுந்த சந்தேகத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டார், ஆனால் அமைதியான உறுதியுடன் தனது படிப்புக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1849 ஆம் ஆண்டில், அவர் பட்டம் பெற்றபோது அனைவரின் கண்களும் அவள் மீது இருந்தன, வகுப்பின் உறுப்பினராக மட்டுமல்ல, மிக உயர்ந்த நிலையிலும்

இது எலிசபெத் பிளாக்வெல்லை அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக மாற்றியது.

எலிசபெத் பிளாக்வெல்(Elizabeth Blackwell: 3 பிப்ரவரி, 1821 – 31 மே, 1910) இங்கிலாந்தில் பிறந்த மருத்துவர்.உலகிலேயே அமெரிக்காவில் முதன்முதல் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்துத் தேறிய உலகின் முதல் பெண் மருத்துவராக விளங்கியவர்.பெண்கள் மருத்துவக் கல்விக்கான முன்னோடியாக விளங்கியவர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெண்கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

எலிசபெத் பிளாக்வெல் 1821 ஆம் ஆண்டில் பிப்ரவரி 3 ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் பிறந்தார். சாமுவேல் பிளாக்வெல் மற்றும் ஹன்னா தம்பதியருக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில், மூன்றாவது குழந்தை தான் எலிசபெத். அவரது உடன்பிறந்தவர்களில் எமிலி பிளாக்வெல், அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற மூன்றாவது பெண் ஆவார்.

எலிஸபெத்தின் தந்தை சாமுவேல் பிளாக்வெல் ஒரு சர்க்கரை சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வந்தார். சாமுவேல் தனது நான்கு மகன்களைப் போலவே தனது ஐந்து மகள்களையும் கல்வி பயில வைத்தார். வறுமையின் காரணமாக சாமுவேல் 1832 இல் பிரிஸ்டலில் இருந்து நியூயார்க்கிற்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார், பின்னர் 1838 இல் சின்சினாட்டிக்கு குடிபெயர்ந்தனர். எலிசபெத்திற்க்கு 17 வயதாக இருந்தபோது ​​​​அவரது தந்தை இறந்தார்.

வருமானத்திற்காக எலிசபெத் ஹன்னா, மரியன் ஆகியோருடன் இணைந்து இளம் பெண்களுக்கான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அகாடமி பள்ளியைத் சின்சினாட்டியில் தொடங்கினர். பின்னர் எலிசபெத் மருத்துவப் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார்.

பாலின பாகுபாட்டினால் நியூயார்க்கில் உள்ள ஜெனீவா மருத்துவக் கல்லூரியைத் தவிர, அவர் விண்ணப்பித்த  மற்ற அனைத்து கல்லூரிகளிலும் நிராகரிக்கப்பட்டார். ஜெனிவா கல்லூரியில் ஆண் மாணவர்கள் எலிசபெத் படிக்க ஏதுவாக ஆதரவு வாக்களித்தனர். இவ்வாறு 1847 இல் எலிசபெத் பிளாக்வெல் அமெரிக்காவில் மருத்துவப் கல்லூரியில் சேர்ந்தார். ஜனவரி 23, 1849 இல் மருத்துவப் பட்டமும் பெற்றார்.ஏப்ரல் 1849 இல், பட்டம் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க மருத்துவ இதழில் அவர் எழுதிய டைபாய்டு காய்ச்சல் பற்றிய ஆய்வு கட்டுரை, முதல் முறையாக ஒரு பெண் மாணவியால் வெளியிடப்பட்ட மருத்துவக் கட்டுரையாகும். மருத்துவப் பயிற்சிக்காக பாரிஸ் சென்ற அவர் ஒரு பொது மகப்பேறு மருத்துவமனையில் பயின்றார். அப்போது ஒரு நோயாளியிடமிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டதால் ஒரு கண்ணில் பார்வையற்றவரானார்.

பின்னர் லண்டனுக்குச் சென்று, செயின்ட் பர்த்தலோமிவ் மருத்துவமனையில், புகழ்பெற்ற புளோரன்ஸ் நைட்டிங்கேல் உடன் பணிபுரிந்தார். நியூயார்க்கிற்குத் திரும்பிய அவர், தன் சகோதரி எமிலியுடன் சேர்ந்து 1857 இல் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நியூயார்க் மருத்துவமனையை திறந்தார். முழுவதும் பெண்கள் பணிபுரிந்த உலகின் முதல் மருத்துவமனை இதுதான்.பின்னர் மருத்துவமனையை மேம்படுத்தி பெண்கள் மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ளும் இடமாக மாற்றினார். பெண் பார்வையாளர்களுக்கு பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினார் .

அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது செவிலியர்களை ஒழுங்கமைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க பங்கைக் எலிசபெத் கொண்டிருந்தார். மேலும் அவரது மருத்துவமனையானது பெண்களுக்கான மருத்துவப் கல்லூரி திட்டத்தை உருவாக்கியது

அவரது பயணம் அங்கு முடிவடையவில்லை. மருத்துவமனை பதவிகளைக் கண்டுபிடிப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பாகுபாட்டை எதிர்கொண்டார்.

 மனம் தளராமல், 1857 ஆம் ஆண்டு தனது சகோதரி டாக்டர் எமிலி பிளாக்வெல் மற்றும் டாக்டர் மேரி ஜாக்ர்செவ்ஸ்கா ஆகியோருடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நியூயார்க் மருத்துவமனையை நிறுவினார்.

இந்த மருத்துவமனை ஒரு முக்கிய பங்கை வகித்தது, பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சேவையை வழங்கியது, மேலும் பிற பெண் மருத்துவர்களுக்கு பயிற்சி மற்றும் பதவிகளை வழங்கியது

எலிசபெத் பிளாக்வெல்லின் அணுகுமுறை வெளிப்படையான மோதலை விட உறுதியான விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்குவதாகும்.

அவரது சாதனைகள் அவரைப் பின்தொடர்ந்து மருத்துவத் தொழிலில் ஈடுபடும் பல தலைமுறை பெண்களுக்கு கதவுகளைத் திறந்தன.

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் அனுபவமும் இதேதான் 

 

Saturday, 28 June 2025

மறக்க முடியாத தோழர் ஜீவா

 


இந்தியாவில் அவசர நிலை நீக்கப்பட்ட நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பொதுக்கூட்டத்தினை காணச் சென்ற நானும் எனது தோழர்கள் அப்துல்ரஜாக், தாமரைச்செல்வன் ஆகியோர் தோழர் நன்மாறனின் பேச்சால் கவரப்பட்டு அவரிடம் சென்று எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். மறுநாளே இஸ்மாயில் புரத்தில் உள்ள எனது நண்பன் அப்துல் ரசாக் வீட்டிற்கு தோழர்கள் நன்மாறன், ஏசிஏஅனந்தன், ரஹ்மத் மற்றும் ஜீவானந்தம் எங்களை தேடி வந்து பார்த்தார்கள். அதிலிருந்து தொடர்ந்தது எங்கள் நட்பு. நாங்களும் சோசிலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இணைந்து பணியாற்றினோம். சங்க பலகை என்று அழைக்கப்படக்கூடிய அருமைத் தோழர் வேலாயுதம் அவர்களின் கண்ணாடி கடையில் அடிக்கடி சந்தித்து பல தலைப்புகளில் பேசி மகிழ்வோம். ஏராளமான அரசியல் வகுப்புகளில் பங்கேற்றோம். சோசிலிஸ்ட் வாலிபர் முன்னணியின் சார்பாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றோம். 

வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு என்ற முழக்கத்தின் கீழ் இளைஞர்களை ஒன்றிணைத்து, சென்னை நோக்கி சைக்கிள் பேரணி மூன்று திசைகளில் இருந்து மூன்று அணிகளாக கிளம்பி சென்றது. தோழர்கள் கிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், நன்மாறன் தலைமையில் ஒரு அணியும், கே சி கருணாகரன் தலைமையில் ஒரு அணியும் சென்னைக்கு சென்றது. தங்கள் பகுதிக்கு வரும் அணியை ஆங்காங்கே இருக்கக்கூடிய இளைஞர்கள் வரவேற்றனர், கூடவே சைக்கிள் பயணம் செய்து குறிப்பிட்ட எல்லை வரை செல்லுங்கள் அனுப்பி வைத்தோம். இறுதியாக இந்த அணிகள் ஆகஸ்ட் 15, 1978 அன்று சென்னையில் கோட்டைக்கு ஒரு பிரம்மாண்டமான பேரணியாக சென்றது. நாங்கள் எல்லாம் மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்னையில் சென்று அந்த பேரணியில் கலந்து கொண்டோம். தோழர்கள் ஜீவானந்தம், கந்தசாமி, ஆனந்தன் உள்ளிட்ட தோழர்களோடு சென்னை சென்றது இன்று நன்றாக நினைவில் உள்ளது.என்னைப் போன்ற இளம் வயது தோழர்களை மிக அருமையாக தோழர் ஜீவானந்தம் கவனித்துக் கொண்டார். எங்களிடம் படிப்பதற்கு ஏராளமான புத்தகங்களை கொடுத்து எப்படி படிக்க வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அவரிடம் பெற்ற ஜார்ஜ் டிமிட்ரோ எழுதிய ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற புத்தகம் என்னிடம் இன்னும் கைவசம் உள்ளது. அரசு பணி கிடைத்தது நான் புதுக்கோட்டைக்கு வந்த பிறகு தொடர்புகள் குறைந்து தான் போனது. இருந்தாலும் எப்பொழுது சந்தித்தாலும் பழைய நினைவுகளை பேசி மகிழ்வோம்.

1977 மற்றும் 1980 சட்டமன்ற தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதியில் தோழரின் சங்கரையா அவர்களுக்கு மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 1985இல் தமிழ்நாடு முற்போக்குழுத்தாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற நாடக விழாவில் நாங்கள் புதுக்கோட்டை சார்பில் கலந்து கொண்டோம். அங்கு அவர் மதுரை குழுவினரோடு வந்து வண்ணங்கள் வேற்றுமை பட்டால் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார் கலை இலக்கியத் துறையிலும் மிக ஆர்வம் கொண்டிருந்த தோழர் ஜீவானந்தம். 

2013 இல் மீண்டும் நான் மதுரைக்கு மாற்றலாகி சென்றபோது அவரை அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கம். சில காரணங்களால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடராமல் போனாலும், இறுதி மூச்சு அடங்கும் வரை உண்மையான கம்யூனிஸ்ட் ஆகவே திகழ்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய பிரச்சாரங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரிமாறிக் கொண்டே இருந்தார்.

கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் உறுதியாக இருந்தார். மிக மிக அருமையான, அபூர்வமான தோழர். அவர் விரும்பியபடி ரஷ்யா சென்று லெனின் உடலை பார்த்துவிட்டு, அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு உணர்ச்சி பெருக்கோடு அதைப் பற்றி பற்றி நிறைய சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அவரது நிறைவேறாத ஆசை செஞ்சீனா செல்ல வேண்டும் என்பதுதான்.

அப்பேர்ப்பட்ட அருமையான தோழர் இன்று 28.6.2025 காலமாகிவிட்டார்.அவரது விருப்பப்படி அவரது உடல் மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ கல்லூரி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவருடைய இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, பொதுவுடைமை இயக்கத்திற்கும் தான் அவருக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

Friday, 27 June 2025

மதவாதம் என்றும் மனித குல விரோதம்

மத நம்பிக்கை என்பது வேறு, மதவாதம் என்பது வேறு. மத நம்பிக்கை என்பது, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருடைய உரிமை, சுதந்திரம், தான் விரும்பும் கடவுளை, தான் நேசிக்கும் கடவுளை, தான் நம்பும் கடவுளை வணங்குவது. 

இதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வருவதில்லை. அவரவர் நம்பிக்கையோடு அது போய் விடுகிறது. ஆனால் மதவாதம் என்பது, தான் நம்பும் கடவுள் அல்லது மதமே சிறந்தது, மற்ற மதத்தை விட மேலானது இந்த மதம் ஒன்றுதான் தீர்வு என்று நம்புவது, பேசுவது செயல்படுவது... 

இதுதான் மோதல்களை உருவாக்குவது. பேதங்களை உருவாக்குவது, அழிவு பாதையில் செல்வது... 

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன, போகின்ற பாதை தான் வேறு, எப்படி ஆறுகள் இறுதியாக கடலில் சேர்கிறதோ, அதுபோல மதங்களும் ஈஸ்வரனை சென்றடைகிறது என்று கூறப்படும் வாக்குமூலம் உலக மகா பொய்யாகும். இதுவரை எந்த மதங்களும் அவ்வாறு நல்லிணக்கத்தோடு செயல்பட விட்டதில்லை. 


இன்னும் சொல்லப்போனால் எல்லா மதங்களுக்குள் இருக்கும் பிரிவுகளுக்குள்ளேயே ஒற்றுமை இருந்ததில்லை. பிணக்குகளிலும், மோதல்களிலும், இறுதியில் சண்டையும் தான் போய் முடிந்திருக்கிறது இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. 

மதங்களுக்கு இடையேயான பினக்குகள் பல போர்களிலும், மனித உயிரிழப்புகளிலும், அழிவுகளிலுமே இட்டுச்செல்லப்படுகின்றன. உலகில் பல நாடுகளில் நடந்த மோதல்கள் இவற்றுக்கு சாட்சியாக உள்ளன. சிலுவை போர்கள் போல எவ்வளவோ சொல்லலாம். ஒவ்வொரு மதமும் பிற மதங்களின்வழிபாட்டுத்தலங்கள், மதச் சின்னங்களை அழித்தல், போன்ற அழிவு செயல்களுக்கு சான்றுகள் ஏராளமாய் உள்ளன. 

இந்தியாவில் தீக்கிரையாக்கப்பட்ட பௌத்த மடாலயங்களும், சமண ஜீனாலயங்களும், உடைக்கப்பட்ட சிலைகளும், ஆயிரக்கணக்கான சமணர்களை இழந்தவை நிகழ்ச்சிகளும் இவற்றிற்கு சான்றுகளாகும். ஒரே மதத்திற்குள்ளேயே உள்ள பிரிவுகளுக்கு இடையிலான மோதல்களிலும் நிறைய அழிவுச் செயல்கள் நிகழ்ந்துள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் சியா சன்னி பிரிவினர் இடையேயான மோதல்கள், கிறிஸ்தவ மதத்தில் கத்தோலிக்க, புராட்டஸ்டண்டுகளுக்கு இடையிலான மோதல்கள், பௌத்தத்திலே மகாயானம், ஹீனயானங்களுக்கு இடையேயான மோதல்கள்,இந்த மதத்திற்கு உள்ளே சைவ வைணவர்களுக்கு இடையிலான மோதல்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் 

ஒரு சாம்பிளை பார்ப்போம்... 

 ISIS எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள், அவர்களின் மடாலயத்தை நெருங்கும்போது, ​​இந்த துறவிகள் தப்பி ஓடவில்லை - அவர்கள் 1,500 ஆண்டுகால அறிவாளிகள் சுவரில் சேகரித்து... அதை மீட்டெடுக்க முயற்சித்தனர்.


இது ஈராக்கின் மொசூலுக்கு அருகிலுள்ள ஒரு பண்டைய கிறிஸ்தவ தலைவர் மார் பெஹ்னம் மடாலயத்தில் நடந்தது, இது கி.பி 4 ஆம் நூற்றாண்டு வரையிலானது வேர்களைக் கொண்டது.


2014 ஆம் ஆண்டில், ISIS போராளிகள் அந்தப் பகுதியை நெருங்கி வந்தனர். அவர்கள் தங்கள் திரிக்கப்பட்ட சித்தாந்தத்திற்கு இணங்காத வரலாற்று மற்றும் மத கலைப்பொருட்களை அழிப்பதில் பெயர் பெற்றவர்கள்.


விலைமதிப்பற்ற நூலகம் பெரும் ஆபத்தில் இருப்பதை துறவிகள் அறிந்திருந்தனர். 500 க்கும் மேற்பட்ட பண்டைய கையெழுத்துப் பிரதிகளை காப்பாற்ற அவர்கள் விரைவாகச் செயல்பட்டனர், சில 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.


நோக்கத்துடனும் கவனத்துடனும், அவர்கள் நூல்களைச் சேகரித்து, தங்கள் ரகசியம் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கையோடு, ஒரு பொய்யான சுவரின் பின்னால் அவற்றை மறைத்து மூடினர்.


ISIS மடாலயத்தைக் கைப்பற்றி, புனித இடங்களை நாசமாக்கியது, மேலும் அந்த மடாலயம் 'அறநெறிப் போலீஸ்' என்று அழைக்கப்படுபவர்களின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் வரலாற்றை அவர்கள் சுத்தமாகத் துடைத்துவிட்டதாக அவர்கள் நம்பினர்.


 ஆனால் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நகரம் விடுவிக்கப்பட்ட பிறகு, துறவிகள் திரும்பி வந்தனர். அவர்கள் சுவரை உடைத்து உள்ளே சென்று, மறைந்திருந்த தங்கள் நூலகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். 


இது நம்பமுடியாத நம்பிக்கை மற்றும் தைரியத்தின் செயல், மத்திய கிழக்கில் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ பாரம்பரியம் என்றென்றும் இழக்கப்படாமல் இருந்தது . 


இன்று, அந்த ஈடுசெய்ய முடியாத கையெழுத்துப் பிரதிகள் கவனமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன, இது அவர்களின் வரலாற்றைப் பாதுகாத்தவர்களின் அமைதியான துணிச்சலுக்கு சான்றாகும்.


ஆதாரங்கள்: HMML, AAP FactCheck, தொல்பொருள் இதழ்.. 

வரலாற்றில் பெண்கள்

 


தன் சொந்த சொத்துக்களை விற்று, டாங்கி (பீரங்கி தொட்டி) ஒன்றை வாங்கி, இரண்டாம் உலகப்போரில் தனது கணவரின் மரணத்திற்காக ஜெர்மானிய படையினை பழி வாங்கிய ஒரு வீரப் பெண்மணி வாழ்ந்திருக்கிறாள் என்பதை உங்களால் நம்ப முடியுமா?! இது ஒரு உண்மை கதை!!! 


மரியா வாசிலியேவ்னா ஒக்டியாப்ர்ஸ்கயா (ரஷ்யன் : மரியா Васильевна Октябрьская ; 16 ஆகஸ்ட் 1905 – 15 மார்ச் 1944) இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனிக்கு எதிராக கிழக்கு முன்னணியில் போராடிய ஒரு சோவியத் பீரங்கி ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் ஆவார் . 
1941 ஆம் ஆண்டு, பத்தொன்பது வயது மரியா ஒக்டியாப்ர்ஸ்காயாவின் கணவர் நாஜிப் படைகளால் கியேவ் போரில் கொல்லப்பட்டபோது அவரது வாழ்க்கை சிதைந்தது. துக்கத்தால் பாதிக்கப்பட்டாலும், உறுதியுடன் இருந்த அவர், படையில் சேர முயன்றார், ஆனால் காசநோய் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார்.

அவரது கணவர் போரில் கொல்லப்பட்ட பிறகு, போர் முயற்சிகளுக்காக ஒரு பீரங்கித்தொட்டியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒக்டியாப்ர்ஸ்கயா தனது உடைமைகளை விற்று, அதை ஓட்ட அனுமதிக்குமாறு கோரினார்.பயிற்சி மற்றும் வாய்ப்பு கேட்டு ஸ்டாலினுக்கு நேரடியாக எழுதினார். குறிப்பிடத்தக்க வகையில், ஸ்டாலின் அவரது கோரிக்கையை ஏற்று அனுமதியை வழங்கினார்.

 அவர் ஒரு T-34 நடுத்தர பீரங்கியை ஓட்டவும் சரிசெய்யவும் பயிற்சி பெற்றார் , அதற்கு அவர் "சண்டை காதலி" (" Боевая подруга ") என்று பெயரிட்டார். போரில் தனது திறனையும் துணிச்சலையும் நிரூபித்தார், மேலும் சார்ஜென்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார். 1944 இல் போரில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்த பிறகு, சோவியத் யூனியனின் ஹீரோவாக அறிவிக்கப்பட்டார் , இது போரின் போது துணிச்சலுக்கான சோவியத் யூனியனின் மிக உயர்ந்த கௌரவமாகும். இந்தப் பட்டம் பெற்ற முதல் பெண் டாங்க் ஓட்டுநர் இவர்தான். 


1944 ஆம் ஆண்டு லெனின்கிராட் முற்றுகையின் போது, ​​துப்பாக்கிச் சூட்டில் தனது டாங்கை பழுதுபார்க்கும் போது அவர் படுகாயமடைந்தார். அவரது கடைசி வார்த்தைகள், "நான் அதை மீண்டும் செய்வேன்" என்பவை.

உண்மையிலேயே ஒரு அசாதாரண பெண்மணி!

கிரிமியன் தீபகற்பத்தில் ஒரு ஏழை உக்ரேனிய குடும்பத்தில் ஒக்டியாப்ர்ஸ்கயா பிறந்தார் . அவர் பத்து குழந்தைகளில் ஒருவர். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, அவர் ஒரு கேனரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார் , பின்னர் ஒரு தொலைபேசி ஆபரேட்டராகவும் பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டில், அவர் இலியா ஒக்டியாப்ர்ஸ்கி என்ற சோவியத் இராணுவ அதிகாரியை மணந்தார். பின்னர் அவர் இராணுவ விஷயங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அவர் 'இராணுவ மனைவிகள் கவுன்சிலில்' ஈடுபட்டார் மற்றும் இராணுவத்தில் ஒரு செவிலியராகப் பயிற்சி பெற்றார். ஆயுதங்களைப் பயன்படுத்துவது மற்றும் வாகனங்களை ஓட்டுவது எப்படி என்பதை அவர் கற்றுக்கொண்டார். "ஒரு சேவையாளரை மணந்து கொள்ளுங்கள், நீங்கள் இராணுவத்தில் பணியாற்றுகிறீர்கள்: ஒரு அதிகாரியின் மனைவி ஒரு பெருமைமிக்க பெண் மட்டுமல்ல, ஒரு பொறுப்பான பட்டமும் கூட" என்று கூறினார். 

இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனை திறக்கப்பட்டபோது , மரியா சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க்கு வெளியேற்றப்பட்டார் . டாம்ஸ்கில் வசிக்கும் போது, ​​ஆகஸ்ட் 1941 இல் கியேவ் அருகே நாஜி ஜெர்மனியின் படைகளுடன் சண்டையிட்டு தனது கணவர் கொல்லப்பட்டதை அறிந்தார். இந்த செய்தி அவரை அடைய இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த செய்தி அவரை மிகவும் கோபப்படுத்தியது, மேலும் தனது கணவரின் மரணத்திற்கு பழிவாங்க ஜெர்மானியர்களுடன் போரிடுவதில் அவர் உறுதியாக இருந்தார். செம்படைக்கு ஒரு  டாங்கை  நன்கொடையாக வழங்குவதற்காக அவர் தனது உடைமைகள் அனைத்தையும் விற்றார் . அவர் தனது டாங்கிற்கு "சண்டை காதலி" என்று பெயரிட்டார், இந்த வார்த்தைகளை T-34 இன் கோபுரத்தில் பொறித்தார். அவரது சக டேங்கர்கள் பலர் அவளை ஒரு விளம்பர ஸ்டாண்ட் மற்றும் நகைச்சுவையாகப் பார்த்தனர், ஆனால் ஒக்டியாப்ர்ஸ்காயா ஸ்மோலென்ஸ்கில் சண்டையிடப்பட்டது தொடங்கியபோது இந்த அணுகுமுறை மாறியது. 

இந்த நேரத்தில், ஒக்டியாப்ர்ஸ்காயாவுக்கு 38 வயது. நன்கொடைக்குப் பிறகு உடனடியாக ஐந்து மாத  டாங்க்   பயிற்சி திட்டத்தில் சேர்ந்தார். இது அசாதாரணமானது: வழக்கமாக  டாங்க் குழு குறைந்தபட்ச பயிற்சியுடன் நேராக முன் வரிசையில் விரைந்தனர். தனது பயிற்சியை முடித்த பிறகு, செப்டம்பர் 1943 இல், 2வது காவல்படை  டாங்கி டையின் ஒரு பகுதியான 26வது காவல்படை  டாங்க்   படைப்பிரிவில் ஓட்டுநர் மற்றும் மெக்கானிக்காக அவர் பணியமர்த்தப்பட்டார் .  . 

அக்டோபர் 21, 1943 அன்று தனது முதல் பீரங்கி போரில் அவர் சண்டையிட்டார். ஒக்டியாப்ஸ்கயா தனது பீரங்கித் தொட்டியை தீவிர சண்டையில் சூழ்ச்சி செய்தார்; அவரும் அவரது சக பணியாளர்களும் இயந்திர துப்பாக்கிக் கூடுகளையும் பீரங்கித் துப்பாக்கிகளையும் அழித்தனர். துப்பாக்கிச் சூட்டால் அவரது பீரங்கித் தொட்டி தாக்கப்பட்டபோது, ​​ஒக்டியாப்ஸ்கயா, உத்தரவுகளை மீறி, தனது பீரங்கித் தொட்டியிலிருந்து குதித்து, கடும் துப்பாக்கிச் சூடு சூடு சூட்டின் கீழ் பழுதுபார்ப்புகளைச் செய்தார். அவர் சார்ஜென்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார் . 

ஒரு மாதத்திற்குப் பிறகு, நவம்பர் 17-18 அன்று, சோவியத் படைகள் ஒரு இரவுப் போரின் போது விட்டெப்ஸ்க் பகுதியில் உள்ள நோவோய் செலோ நகரத்தைக் கைப்பற்றின . இந்தத் தாக்குதலின் போது, ​​ஒக்டியாப்ர்ஸ்கயா ஒரு திறமையான டாங்க் டிரைவர் என்று தனது நற்பெயரை அதிகரித்தது. நவம்பர் 17 அன்று, ஒக்டியாப்ர்ஸ்கயா நோவோய் செலோ அருகே ஜெர்மன் நிலைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு ஜெர்மன் பீரங்கி ஷெல் அவரது டாங்கின் தண்டவாளங்களுக்கு எதிராக வெடித்து, அவரது முன்னேற்றத்தைத் தடுத்தது. ஒக்டியாப்ர்ஸ்கயாவும் ஒரு சக குழு உறுப்பினரும் பாதையை சரிசெய்ய வெளியேறினர், அதே நேரத்தில் மற்ற குழு உறுப்பினர்கள் கோபுரத்திலிருந்து வெளியேறினர். மறைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டை வழங்கினர். இறுதியில், அவர்கள் பாதையை சரிசெய்தனர், மேலும் அவரது  டாங்க்   பல நாட்களுக்குப் பிறகு பிரதான அலகில் மீண்டும் இணைந்தது. 

இரண்டு மாதம், ஜனவரி 17, 1944 அன்று, ஒக்டியாப்ர்ஸ்காயா மற்றொரு இரவுத் தாக்குதலில் ஈடுபட்டார். இந்தப் போர் அவரது கடைசிப் போராக இருக்கும். இந்தத் தாக்குதல் வைடெப்ஸ்க்கு அருகிலுள்ள கிரின்கி கிராமத்தில் நடந்தது. போரின் போது, ​​அவர் தனது T-34 ஐ ஜெர்மன் பாதுகாப்புப் பகுதிகளைச் சுற்றி ஓட்டி, அகழிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிக் கூடுகளில் எதிர்ப்பை அழித்தார். ஜெர்மன் சுயமாக இயக்கப்பட்ட டாங்க் குழுவினர் துப்பாக்கியையும் அழித்தனர். அதைத் தொடர்ந்து, டாங்க் மீண்டும் தண்டவாளத்தில் ஒரு ஜெர்மன் டாங்க் எதிர்ப்பு ஷெல்லால் தாக்கப்பட்டு , அசையாமல் போனது. ஒக்டியாப்ஸ்காயா உடனடியாக தொட்டியிலிருந்து இறங்கி, கடுமையான சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மத்தியில், தண்டவாளத்தை சரிசெய்யத் தொடங்கினார். அவர் தண்டவாளத்தை சரிசெய்தார், ஆனால் ஷெல் துண்டுகளால் தலையில் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்தார். போருக்குப் பிறகு, அவர் கியேவ் அருகே உள்ள ஃபாஸ்டிவ் நகரில் உள்ள ஒரு சோவியத் இராணுவ கள மருத்துவமனை , பின்னர் ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்கில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . மார்ச் 15 அன்று இறுதியாக இறந்த பிறகு, அவர் இரண்டு மாதங்கள் கோமாவில் இருந்தார். ஸ்மோலென்ஸ்கில் உள்ள ஹீரோஸ் நினைவுத் தோட்டத்தில் இராணுவ மரியாதைகளுடன் அவர் அடக்கம் செய்யப்பட்டார். 

அடுத்த ஆகஸ்ட் மாதம், வைடெப்ஸ்கைச் சுற்றியுள்ள போர்களில் அவர் காட்டிய துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக ஒக்டியாப்ஸ்கயாவுக்கு சோவியத் யூனியனின் நாயகி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 

 

சால்வடார் அலெண்டே

 உலக ஜனநாயகத்தின் பாதுகாவலன் நாங்களே என்று தங்களுக்கு தாங்களே சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு, உலகில் பல நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலாத்காரத்தாலும், நயவஞ்சகமாக கலைத்து நாசம் செய்த அமெரிக்காவின் சில "சாம்பிள்" களை பார்ப்போம். 

அமெரிக்காவின் இரத்த வெறி பிடித்த கொலைகள் எண்ணிலடங்கா. அந்த நாடுகளின் தலைவர்களையே நடுங்க வைத்தது. சிலி நாட்டில் அமெரிக்கா தனது கைகூலி படைகளை வைத்து அரங்கேற்றிய அரசியல் படுகொலை.  சிலிநாட்டு குடிமக்கள் செப்டெம்பர் 11, 1973ஐ ஒருபோதும்  மறக்கமாட்டார்கள்.


அன்று சிலி நாட்டை ஆட்சி செய்தவர் சால்வடோர் அலெண்டே. முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். செப்டெம்பர் 11, 1973 அன்று அலெண்டேக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய ராணுவம் அமெரிக்கவால் களமிறக்கப்பட்டது. அலெண்டேயின் அரசதலைவர் மாளிகை முற்றுகைக்குள்ளானது, அவர் உயிரைக் குடிக்கும் துவக்கங்கள் காத்திருந்தன. அதையுணர்ந்தும் அஞ்சாத நெஞ்சுடன் நாட்டு மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான உரையாற்றிகொண்டிருந்தார் அலெண்டே.

தனது நாட்டு மக்களின் வாழ்வை, தான் மேலாக பற்று வைத்திருந்த சிலி நாட்டை ஒரு போதும் அடக்கம் செய்பவர்களுக்கு அடிபணிந்து விட்டுக்கொடுக்க அவர் தயாரிக்கவில்லை. எதிரியின் கைகளில் கோழைத்தனமாக தான் வாழ்வதை விட வீரனாக மரணத்தை தழுவ விரும்பினார் அலெண்டே. இனிய நண்பர் பிடல் காஸ்ரோ தனக்கு வழங்கிய அழகிய துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டார் அலெண்டே. இந்த அரசியல் கொலைக்கு பின்னால் இயங்கியது யார்? அந்த வெள்ளை மாளிகையில் இருந்த நிக்சன் தலைமையில் அமெரிக்க அரசு சி.ஐ.ஏ.


அலெண்டே என்ன குற்றம் செய்தார்? அவர் பயங்கரவாதியா? 

அவர் பக்கத்து நாடுகள் மீது படையெடுத்து அச்சுறுத்தினாரா? 

படுகொலைகள் நடத்தினாரா? 

இல்லை மக்களின் பணத்தை கொள்ளையடித்தாரா?

  சிலி மக்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் வரலாற்றை மறவாத மனதுகளில் அலையாய் மோதுகிற கேள்விகள் இவை.

அவர் செய்ததெல்லாம் இவைதாம்.. 

ஜனாதிபதியாக, அலெண்டே முக்கிய தொழில்களை தேசியமயமாக்கவும், கல்வியை விரிவுபடுத்தவும், தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முயன்றார்.

 சிலியின் சிறந்த இடதுசாரித் தலைவர் சால்வடார் அலெண்டே ஜூன் 26, 1908 இல் பிறந்தார். 1970 தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு அவர் சிலியின் முதல் இடதுசாரி மற்றும் மார்க்சிஸ்ட் ஜனாதிபதியாக உயர்ந்தார். அலெண்டேவின் நிர்வாகம் மிகவும் நீதியான, நியாயமான மற்றும் சமமான சிலியை உருவாக்க தேசியமயமாக்கல் மற்றும் ஜனநாயகமயமாக்கல் ஆகியவற்றின் தீவிரம் சோசலிச திட்டத்தைப் பின்பற்றியது.

இந்த படுகொலையின் பின்னணி என்ன?


செப்டெம்பர் 4, 1970ல் சோசலிச கொள்கை கொண்ட சால்வடோர் அலெண்டே 36.2 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜார்ஜ் அலெச்சந்திரி (சி.ஐ.ஏ. வால் வெற்றிபெறுவார் என நம்பப்பட்டவர் இவர். முன் அரசதலைவர்) 34.9 சதவீதம் பெற்றார். மற்றொரு வேட்பாளர் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சார்ந்த ரடோமிரொ றொமிக் 27.8 சதவீத வாக்குகள் பெற்றார், இவரது செல்வாக்கு இருந்த மக்களிடம் அலெண்டேயின் செல்வாக்கும் காணப்பட்டது. அப்போதைய சட்டப்படி மக்கள் வாக்குகளில் (மக்கள் வாக்குகள்) பெரும்பான்மையில்லையெனில், காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்ற இருவரில் ஒருவரை அரச தலைவர் (இது ஒன்றும் மக்களாட்சியில் புதிதல்ல, அமெரிக்க அரச தலைவர்கள் ஜார்ஜ் புஸ், பில்கிளிண்டன் மற்றும் பிரிட்டிஸ் பிரதமர் மார்கரெட் தாட்சர் இதே முறையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட). இந்த நிலையில் அமெரிக்க அரசு, சி.ஐ.ஏவும் பல சதித்திட்டங்களுடன் திரைமறைவு மிரட்டல் அரசியலில் இறங்கியது. சிலி நாட்டின் இராணுவத்தளபதி சி.ஐ.ஏ கைகூலியாக வைத்த கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டார். நாட்டின் ஆபத்தான நிலையை உணர்ந்த காங்கிரஸ் அலெண்டே தான் அரச தலைவர் என நவம்பர் 3, 1970ல் அறிவித்தது.

அலெண்டே ஆட்சியில் இருந்த முதல் ஆண்டு, சோசலிச கொள்கைகளைத் தொடங்குவதில் வெற்றிகரமாக இருந்தது குறிப்பாக அவரது ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குறை கூற முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது.இரண்டாவது பெரிய சாதனையாக நாட்டின் வங்கிகளை தேச உடமை ஆக்க துவங்கினார். சிலியின் முக்கிய இயற்கை வளமான காப்பர் (செம்பு ) சுரங்கங்களை தேசி உடமை ஆக்கினார். இந்த முடிவிற்கு நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. ஜவுளி நிறுவனங்கள் முதல் பல துறைகளில் சமூக சொத்துக்களை சிலி அரசாங்கம் உருவாக்கியது.

அலெண்டே ஆட்சியில் பல வங்கிகள், சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டது. சுகாதார அமைப்பில் சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், குழந்தைகளுக்கு இலவச பால் என பல மக்கள்நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முந்தைய அரசின் விவசாய வளர்ச்சித்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. எல்லா தரப்பு மக்களின் ஊதியத்தை உயர்த்திய அதே வேலையில் பொருட்களின் விலையேறாமல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.


அதே வேளையில் அலெண்டேயின் அரசு எதிர்ப்பையும் தேடியது. இம்முறை எதிர்த்தவர்கள் கணகில்லா நிலங்களை தனது கைகளில் அனுபவித்து வந்த பணம்படைத்தவர்களும், பிற்போக்குத்தன கல்வியை சோசலிச கல்விமுறை மாற்றியது விரும்பாத கத்தோலிக்க மதமும். அசராத அலெண்டே தனது சீர்திருத்தத்தை ஏழைமக்கள் பயன்படும் திட்டங்களாக உருவாக்கினார். அவை கல்வி, வேலைவாய்ப்பு, பொதுக்கட்டமைப்புகள் என தொடர்ந்தன. முதல் வருடம் நாட்டில் பொருளாதரம் வரலாறு காணாத முன்னேற்றமடைந்தது.


தொடர்ந்து வந்தது அலெண்டேவின் நெருக்கடியான காலம். கடைகளில் பொருட்களை வர விடாமல் தடுத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதன் பின்னால் இருந்தது அலெண்டேயின் எதிரிகளான செல்வம் படைத்தவர்கள். டிரக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. சர்வதேச சந்தையில் சிலிநாட்டு ஏற்றுமதி கனிமமான செம்பு (காப்பர்) விலைவீழ்ச்சி. சர்வதேச பெரியண்ணன் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளும் கூடவே தேடிவந்தது. தொடர்ந்து நாடே பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அவர் காங்கிரஸைக் கட்டுப்படுத்தும் வலதுசாரிக் கட்சிகளுடனும் நீதித்துறையுடனும் மோதினார். செப்டம்பர் 11, 1973 அன்று, சிஐஏவால் ஆதரிக்கப்பட்ட ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் அலெண்டேவை வெளியேற்ற இராணுவம் நகர்ந்தது , இது ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தது.  2000 ஆம் ஆண்டில், அலெண்டேவின் பதவியேற்பைத் தடுக்க இராணுவத்தைப் பயன்படுத்த மறுத்த ஜெனரல் ரெனே ஷ்னைடரை 1970 இல் கடத்தியதில் சிஐஏ தனது பங்கை ஒப்புக்கொண்டது . 2023 இல் வெளியிடப்பட்ட வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், அலெண்டேவை "ஆபத்தான" கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்திய அமெரிக்க அரசாங்கம் , ஆட்சிக் கவிழ்ப்புக்கு முந்தைய நாட்களில் அலெண்டேவின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான இராணுவத்தின் திட்டங்களை அறிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது . லா மொனெடா அரண்மனையை துருப்புக்கள் சுற்றி வளைத்தபோது , ​​அலெண்டே ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சபதம் செய்து தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

இராணுவத்தின் டாங்கி பிரிவு ஜூன் 29, 1973 கர்னல் ரொபர்டோ சொய்பர் தலைமையில் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டது. இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு ஆகஸ்டு 9ல் ஜெனரல் பிரட்ச் இராணுவ தலைமை ஏற்றார். அவரும் நெருக்கடிகளால் இராஜினாமா செய்தார். ஆகஸ்டு 22 பினோசெட் ராணுவ தலைமை பொறுப்பேற்றார் அவர் தலைமையில் தான் இராணுவ புரட்சி அரங்கேறியது.


தொடர்ந்து பினொசெட் ஆட்சிப்பொறுப்பில் 17 வருடங்கள் அமெரிக்காவின் ஆசியுடன் சர்வாதிகாரியாக உயிரிழந்தார். இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எண்ணிக்கை, சித்திரவதை செய்யப்பட்டவர்கள், சிறைகொடுமை அனுபவித்தவர்கள் பல்லாயிரம் மக்கள். இந்த கொடுங்கோன்மை ஆட்சிக்கு பாதையமைத்தது அமெரிக்கா என்பதற்கான உறுதியான ஆவணங்கள் தற்போது வெள்ளைமாளிகையால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அலெண்டேவின் ஆட்சியை பலிவாங்க அடிப்படையாக இருந்ததை அமெரிக்க அரசு ஆவணங்கள் உறுதி செய்கின்றன. முதல் முறையாக சிலி நாட்டில் சர்வாதிகார ஆட்சியை அமர்த்திய பெருமையும் சிலி மக்கள் வாழ்வை குலைத்த பெரும்பேறும் அமெரிக்கா என்ற அரச வல்லாதிக்கத்தை சேரும். பினோசெட் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கிய பின்னர் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட சித்திரவதைக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கோழையை சிலி நாட்டுக்கு அனுப்பி வீட்டுக்காவலில் சக்கரநாற்காலியில் முடக்கிவைத்தது தனி வரலாறு.


"வாழ்க சிலி! வாழ்க மக்கள்! வாழ்க தொழிலாளர்! எனது தியாகம் வீண்போகாது...." இது அலெண்டே என்ற அசைக்க முடியாத வீரனின் கடைசி குரல்கள் வானொலியில் மக்களுக்காக. வரலாற்றில் அந்த வீரனின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது இராணுவ வல்லமை பொருந்திய அமெரிக்கா.



செப்டம்பர் 11, 1973 அன்று தனது அரசாங்கத்தையும் ஜனநாயகத்தையும் தூக்கியெறிந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஆதரவுடன் நடந்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து அலெண்டே இறந்தார்.


.

அலெண்டே இறுதியாக ஆற்றிய உரை இது.. 

நாம் சோசலிசத்தை நோக்கி நகர்கிறோம், ஒரு கோட்பாட்டு அமைப்பின் மீதான கல்விசார் அன்பினால் அல்ல, மாறாக நமது மக்களின் வலிமையால் ஊக்குவிக்கிறோம். பின்தங்கிய நிலையை வெல்வதற்கு அது தவிர்க்க முடியாத கோரிக்கை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் சுதந்திரம், சுதந்திரம் மற்றும் கண்ணியத்தில் பகுத்தறிவுடன் கட்டமைக்க விரும்பும் நவீன நாடுகளுக்கு ஒரு சோசலிச ஆட்சி மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரே வழி என்று அவர்கள் உணர்கிறார்கள். மக்கள், தங்கள் வாக்குகளின் மூலம், முதலாளித்துவத்தை சுதந்திரமாக நிராகரித்ததால், அது ஒரு முரட்டுத்தனமான சமத்துவமற்ற சமூகத்தை, சமூக நீதியால் சிதைக்கப்பட்டது மற்றும் மனித ஒற்றுமையின் அடித்தளங்களின் சீரழிவால் சீரழிந்த ஒரு சமூகத்தை உருவாக்கியது. 


வீரத்தின் மிக உயர்ந்த உதாரணத்தை வெளிப்படுத்திய அலெண்டேவை நாங்கள் நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம்.

ஜெனரல் பினோசே மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தின் கொடூரம் மற்றும் கொடூரத்தை எதிர்த்து சிலி மக்கள் பல ஆண்டுகளாக வீரம், எதிர்ப்பு மற்றும் தியாகத்தை நாங்கள் நினைவில் கொள்கிறோம்











Wednesday, 25 June 2025

ஐக்கிய நாடுகள் சபை


 வரலாற்றில் இந்த நாளில் 06/26/1945 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்தானது. இந்த முக்கிய தருணத்தில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையை முறையாக நிறுவினர். இது இரண்டாம் உலகப் போரின் பேரழிவு தாக்கங்களுக்குப் பிறகு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதி காக்கும் முயற்சிகளின் புதிய சகாப்தத்தைக் குறித்தது. 


சாசனத்தில் கையெழுத்திட்டது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது, எதிர்கால மோதல்களைத் தடுப்பதற்கும் உலகளாவிய உரையாடலை வளர்ப்பதற்கும் ஒரு உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இந்த ஆவணம் நவீன சர்வதேச உறவுகளுக்கு அடித்தளமிட்டது மற்றும் உலகளவில் இராஜதந்திர முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கிறது.

இப்படி மிக உயர்ந்த லட்சியங்களோடு, இதே நாளில் துவங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை..... 

நாமும் ஆகா ஓகோ என்று புகழத்தான் ஆசை. ஆனால் நடைமுறை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோ கைப்பிடிக்குள் சிக்கித் தவித்து சீரழியும், சும்மா ஒப்புக்கு மட்டுமே தீர்மானங்கள் நிறைவேற்றி, கெஞ்ச கூடிய சபையாக மாறியுள்ளது. ஒருவேளை ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வந்தால், பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வகிக்கும் நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து விடுவார்கள். வீட்டோ அதிகாரம் ஒழிக்கப்படாத வரை ஐநா சபை என்பது வெறும் திண்ணை பஞ்சாயத்து மட்டுமே... 

பட்டிமன்றங்கள் படும் பாடு

 நான்  முதன்முதலாக பட்டிமன்றத்தை பார்த்து ரசித்தது, மதுரை ராமநாதபுரம் காலையில் உள்ள அரச மரம் பிள்ளையார் கோயிலில் 1977 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவின் போது நடைபெற்ற ஒரு சிறப்பான பட்டிமன்றம் தான். குன்றக்குடி அடிகளார் நடுவராக இருந்து மக்களின் பிரச்சினையை தீர்ப்பது பகவத் கீதையா, திருக்குறளா, மார்க்சியமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றம் தான்.

 அந்தப் பட்டிமன்றத்தில் தமிழகத்தில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டார்கள் பகவத் கீதையே என்ற தலைப்பில் திரு சத்தியசீலன் அவர்கள் தலைமையில் ஒரு அணியும் திருக்குறளே என்ற தலைப்பில் திருமதி சக்தி கோதண்டம் தலைமையில் ஒரு அணியும், மார்க்சியமே என்ற தலைப்பில் திரு தா பாண்டியன் அவர்கள் தலைமையில் ஒரு அணியும் கலந்து கொண்டு மிக சிறப்பாக பேசினார்கள். பேசியவர்கள் எல்லாம் கொடுக்கப்ட்ட தலைப்பின் உள்ளே புகுந்து அலசி ஆராய்ந்து மிகத் தெளிவாக தங்களது கருத்துக்களை விளக்கினார்கள். 

முதற் சுற்றிலே பகவத் கீதை வெளியேறியது. இறுதியாக திருக்குறளே, மார்க்சியமே என்ற தலைப்பு மோதியதில், மக்கள் பிரச்சினையை தீர்க்க உதவுவது திருக்குறளும், மார்க்சியமும் இணைந்து என்று குன்றக்குடி அடிகளார். தனது தீர்ப்பினை வழங்கினார். ஒரு துறவியாக இருந்தாலும் மார்க்சியம் என்ற தலைப்பில் அரசியல் பொருளாதார கருத்துக்களை  பற்றியும், திருக்குறளில் உள்ள சமூக பொருளாதார கருத்துக்களையும் இணைத்து இலக்கிய பூர்வமாக மிக அருமையாக தனது உரையை நிகழ்த்தி தீர்ப்பு வழங்கினார்.

 அந்தக் கூட்டத்தை அப்போதைய மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு என் சங்கரையா அவர்கள் துவக்கி வைத்தார்கள். அந்த காலத்தில் மதுரையிலே அந்த பட்டிமன்றம் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது. 

பொதுவாக அந்த காலங்களில் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கருத்தரங்கங்கள் அதிகமாக நடைபெற்றன. நல்ல தலைப்புகளில் மிகச் சிறந்த பேச்சாளர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் நல்லதொரு ஆராய்ச்சி உரை வழங்கினார்கள். பெரும்பாலும் ராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற தலைப்புகளை ஒட்டியே பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் மிகச் சிறந்த பேச்சாளர்களாகநெல்லை கண்ணன், அறிவொளி, சத்தியசீலன், இளம்பிறை மணிமாறன், பாரதி கிருஷ்ணகுமார் என்று ஒரு பெரிய பட்டாளமே வந்தது. 

 பின்னாளில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக மாற ஆரம்பித்தது.


மக்கள் ரசிப்பதற்காக நிறைய நகைச்சுவை கலந்து பேச ஆரம்பித்தார்கள். நண்பர் பாரதி கிருஷ்ணகுமார் வேடிக்கையாக சொல்வார். கற்பில் சிறந்தவர் கண்ணகியா மாதவியா என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் நடைபெற்றால், கற்பில் சிறந்தவள் கண்ணகி அல்லது மாதவி, இன்னின்ன வகையில் சிறந்தவள் என்று அவர்களது சிறப்பு அம்சங்களை கூறுவதை விட இவள் எப்படி கெட்டுப் போனவள் அல்லது சரியில்லாதவள் என்று அதிகமாக பேசிவிட்டு அதனால் அவள் கற்பில் சிறந்தவள் என்று பேசி கைதட்டு வாங்குகிறார்கள் என்பார். 

அப்புறம் பேசுகிற பேச்சாளர்களை ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசி ஜனங்களை சிரிக்க வைத்து தலைப்புகளில் ஆழமாக பேசுவதை விட கைதட்டுகளுக்காகவே கதைகள், நகைச்சுவை துணுக்குகள், ஆகியவற்றை அதிகம் இணைத்து பேசி பட்டிமன்றத்தின் சாராம்சங்களை குறைக்க ஆரம்பித்தார்கள்.

 அப்புறம் புண்ணியவான் லியோனி தலைமையில் ஒரு பட்டிமன்ற கோஷ்டி வந்தது. அவர்கள் பேசுவதோடு திரைப்பட பாடல்களைப் பாடி, காமெடி செய்து பட்டிமன்றத்தின் போக்கையே மாற்றினார்கள். நிறைய பேர் ரசிக்க ஆரம்பித்தனர். அவர்களது பேச்சுக்கள் எல்லாம் ஒலிநாடாக்களாக தமிழகம் தமிழகமெங்கும் வளம் வந்தது. 

நல்ல வேலையாக அந்த காலத்தில் பாடுகிற கூத்துக்கள் இல்லை. இருந்திருந்தால் அறிவொளி,  சத்தியசீலன் போன்றவர்கள் எல்லாம் பாடி இருப்பார்களா தெரியவில்லை. பாட தெரியவில்லை என்றால் பேச முடியாது என்கிற நிலை இருந்திருந்தால் நல்ல பேச்சாளர்கள் வந்திருப்பார்களா என்று தெரியாது.

 தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் ஒளி பரப்ப ஆரம்பித்த பிறகு, சமூக தலைப்புகளில், குடும்பத் தலைப்புகளில் அதிக பட்டிமன்றங்கள் வந்தன. நிறைய பேரை பட்டிமன்றங்கள் சென்றடைந்தது,.

 ஆனாலும் ஆழமான கருத்துக்களை.,ஆராய்ந்து பேசுவதை விட ஜனங்களை ரசிக்க வைக்கும் விதமாக கதைகள், நகைச்சுவை துணைக்குகள், பாடல்கள் நிறைந்த கதம்ப பேச்சுக்கள் தான் அதிகம் வருகின்றன.


இட்லிக்கு தேவை சட்னியா, சாம்பாரா போன்ற தலைப்புகள் வந்து, இட்லிக்கு தேவை அரிசியும் உளுந்தும் தான் என்கிற மாதிரியான பட்டிமன்றங்கள் அதிகமாகிறது. சமூக பொருளாதார விஷயங்களை, மனிதனை சிந்திக்க தூண்டுகின்ற, கருத்தாழமிக்க பேச்சுக்கள் குறைந்து வருவதாக தோன்றுகிறது. 

பட்டிமன்ற புகைப்படம் கிடைக்கவில்லை. அதேகோவிலில் நடைபெற்ற வேறொரு மகாசிவராத்திரி நிகழ்ச்சி இது 


Tuesday, 24 June 2025

சுனாமிக்கே சுவரா..

'பயனற்ற' சுவரை $30 மில்லியனுக்கு சமமாக செலவழித்ததற்காக மேயர் கோட்டாகு வமுராவை அவர்கள் ஒரு முட்டாள் என்று அழைத்தனர்.

மார்ச் 11, 2011 அன்று, அவரது சிறிய மீன்பிடி கிராமத்தில் வசிப்பவர்கள் அவர் நம்பமுடியாத ஞானமுள்ள மனிதர் என்பதை உணர்ந்தனர்.

1960 களில், ஜப்பானின் ஃபுடாயின் மேயரான வமுரா, 1896 மெய்ஜி-சான்ரிகு சுனாமியின் கதைகளை ஒருபோதும் மறக்கவில்லை. அந்த அலை 15 மீட்டர் உயரத்தை எட்டியது மற்றும் இப்பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தியது.


ஒரு பெரிய கட்டுமான தடையால் மட்டுமே தனது மக்களை அந்த அளவிலான எதிர்கால பேரழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். 15.5 மீட்டர் (51-அடி) கடல் சுவர் மற்றும் வெள்ளக் கதவு கட்டுவதற்கு அவர் அழுத்தம் கொடுத்தார். 


இந்தத் திட்டம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஒருபோதும் பணம் தேவைப்படாத ஒன்றின் மீது மிகப்பெரிய வீணடிப்பதாகக் கருதப்பட்டதற்காக வமுரா தொடர்ந்து ஏளனத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டார்.

அவர் திட்டத்திற்காக தனது அரசியல் நற்பெயரை தியாகம் செய்தார். 1997 ஆம் ஆண்டு, தனது தண்டனை நியாயமானது என்று தெரியாமல், வமுரா மறுப்பு கட்டாயத்தின் கீழ் ஓய்வு பெற்றார்.

பின்னர், 2011 ஆம் ஆண்டு, டோஹோகு சுனாமி ஜப்பானைத் தாக்கியது. அண்டை நகரங்களைத் தரைமட்டமாக்கிய அலைகள் வமுராவின் சுவரில் பாதிப்பில்லாமல் மோதின. 

சுவருக்குப் பின்னால், ஒரு வீடு கூட அழிக்கப்படவில்லை, எந்த உயிர்களும் அலையால் இழக்கப்படவில்லை. அவர் கட்டியதற்காக கேலி செய்யப்பட்ட கட்டமைப்பு அவரது முழு சமூகத்தையும் காப்பாற்றும் கேடயமாக மாறியது. 

அவர் இறந்து இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மேயர் வமுராவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் விலையுயர்ந்த விடாமுயற்சி இறுதியாக, முழுமையாக, நிரூபிக்கப்பட்டன.

அணை நீர் நீராவியாகி வெளியேறுவதை தடுக்க தெர்மாகோல் அட்டை போட்ட, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை கட்டுப்படுத்த செலோபன் டேப் ஒட்டிய அரசியல்வாதிகளை விட, கட்டாத பாலத்திற்கும் போடாத ரோட்டிற்கும் காசு வாங்கிய ஆசாமிகளை விட பசுவுக்கு பகவத் கீதை கற்றுக் கொடுத்த பாகவதர்களை விட கேலிக்காளானாலும் தொலைநோக்குபார்வையுடன் முயற்சி செய்த இவர் ஆயிரம் மடங்கு மேல்.... 



ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...