Thursday 15 December 2016

வார்தா

மழை வராதா என
மனிதர்கள் ஏங்கி தவிக்கையில்
மழையும் காற்றுமாய் வந்து
மரங்களை வேரோடு சாய்த்தாயே ....
பணத்துக்கும்
பவிசுக்கும்
பதவிக்குமாய்

மரங்களை  மனிதர்கள்
சாய்த்தது போதாதென்று
இயற்கையை நேசிப்போர்
ஏங்கி தவிக்க
நீயும் ஏன்
வீழ்த்தி சென்றாய்...
வார்தா நீ வாராதிருந்தாலே

நன்றாய் இருந்திருக்கும்......

Saturday 5 March 2016

ஆனந்தம்

மகிழ்ச்சியும் உற்சாகமும் 
பள்ளிக்காலத்தில் மட்டுமே 
ஆடைகள் 
அந்தஸ்துகளின் 
ஆதிக்கமில்லாமல் வாழும் 
அரசு பள்ளி பிள்ளைகளின்
அற்புத காலம்...

Thursday 3 March 2016

காதலர் தினம்



பூவிலும் பெண்மை
பணியிலும் குளுமை
கனியிலும் இனிமை
கல்லிலும் வன்மை
குழந்தையின் பிடிவாதம்
கிழவனின் கனவு
என கணிக்கமுடியா
அற்புத பொருள்
காதல் ......
சுற்றி உள்ளவர்களால்
தூண்டிவிடப்பட்டு
தூண்டி விடப்பட்டவர்களால்
நடத்தப்படும்
இனிய
துன்பியல் நாடகம்
காதல்..........


(மிகவும் தாமதமாக ....!)

Thursday 28 January 2016

தனி மரம்....


 தலைநகரத்தின்
மையத்தில்
தலைமையக வளாகம்...
உடனிருந்த
நண்பர்களை இழந்த
தனி மரம்....
தலைமுறைகளை
தாண்டி
தனியாய் நிற்கிறது......
தர்பார் பல கண்டும்
தளராமல்
நிற்கிறது....
ஆயிரமாயிரம்
மக்களை
அன்றாடம் காண்கிறது....
ஆனந்தம்..
ஆரவாரம்...
 அழுகை....
கோரிக்கை..
போராட்டம்...
பாராட்டு.....
அத்தனையும்
கண்டும் அலட்டாமல்
 நிற்கிறது......
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
முனிவர் போல......

Friday 8 January 2016

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டிற்கு
மத்திய அரசு அனுமதி
மகிழ்ந்தனர்
தமிழர் பெருமக்கள் .......

Friday 1 January 2016

வருக வருக புத்தாண்டே

வருக வருக
புத்தாண்டே
வருகின்ற
2016 ஆம் ஆண்டு
வண்ண மயமாய்
மலர்ந்திடவும் ………
எண்ணுகிற எண்ணங்கள்
ஏற்றமயமாய்
இருந்திடவும் ……….
கைக்கொள்ளும்
காரியங்கள்
கைகூடிடவும் ………
உலக மாந்தர்
உயர்வு பெற்றிடவும்
வாழ்க வளமுடன்
என
மனமார வாழ்த்திடும்

 நெஞ்சம்

விடை பெறுக 2015.........

விடை பெறுக 2015.........
பட்டதும்
 பெற்றதும்
கற்றதும் ……….
அடைந்ததும்                                                            
இழந்ததும்
மகிழ்ந்ததும்………
வீழ்ந்ததும்
மீண்டு
 எழுந்ததும் …………
அத்தனையும்
நன்மைக்கே.....
வருகின்ற
காலம்
நமக்கானதாய்
நம்முடையதாய்
அமைந்திட
வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்.