Sunday 1 September 2013

அல்லாஉதீனின் அற்புத விளக்கு




எண்ணிய உடன் 
திண்ணமாய் 
செய்து முடிக்கும் 
அல்லாஉதீனின் அற்புத விளக்கு
அகப்பட்டால் நலம்.......
அல்லாஉதீனின் அற்புத விளக்கு
அகப்படாவிடில்
எண்ணுவது என்பது 

எளிமையாய் இருத்தலே சுகம்....  

Thursday 23 May 2013

காத்திருந்து....காத்திருந்து.....


காத்திருத்தல் சுகமான அனுபவம்...
காதலிக்கு........
கல்யாணத்துக்கு.....
குழந்தைக்கு......
வளமான வாழ்வுக்கு........
......................................................
வெற்றியின்றி
வெட்டியாய்...
குஞ்சு பொறிக்கா.
கூமுட்டைக்காய்
வெட்டியாய் அடை காத்து
வெற்றியின்றி
வெட்டியாய்......
....................
காத்திருந்தால்?!


Wednesday 22 May 2013

நகர் வலம்......


மாதம் மும்மாரி 
மழை பொழிகிறதா...
குடி படைகள் நலமா 
குசலம் விசாரித்தனர்.....

மழை பொய்த்த்ததும்
மண் வெடித்ததும்
குடிசைகள் தீய்ந்ததும்
குடிகள் மாய்ந்ததும்

ஊர்  போன போக்கு 
ஒன்றுமே தெரியாமல்
குசலம் விசாரித்தனர்
குடி படைகள் நலமா?


Saturday 12 January 2013

போகிப்பண்டிகை


வீட்டில் உள்ள
பழையன. நீக்கி 
ஊரை அசுத்தமாக்கி 
புதியன புகுத்திடும் 
புதுமை பண்டிகை..........



Monday 7 January 2013

தூங்கும் பாகணும் கடுப்பான யானையும் .....

கால் கடுக்க நின்று 
நாலு காசு சம்பாரிக்கிறேன்.....
ஒக்காந்த இடத்திலேயே 
ஒம்பாட்டுக்கு தூங்குனா எப்படி?

Thursday 3 January 2013

வழி தவறிய வெள்ளாடுகள்

புத்தாண்டு முடித்த கையோடு வீட்டுக்கு இரண்டு புதிய நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.வேண்டுமென்று வரவில்லை.பாதை தெரியாமல் வந்து சேர்ந்தார்கள்.வீதி நாய்கள் துரத்தியதால் தாயை விட்டு பிரிந்த வெள்ளாட்டு குட்டிகள் தாம் அவை ..
வாசலில் வந்து நின்ற அவர்களை பார்த்த என் பத்தினியார் வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
(அவர்களுக்கும் முகவரி சொல்ல தெரியவில்லை?!)
முதலில் உரிமையாளர்கள் யாரென்று விசாரித்து பார்த்தால்யாருக்கும் தெரியவில்லை.
 பசி களைப்பு வேறு...தாயை பிரிந்த சோகம் ...பரிதாபமாய் கத்தி தீர்த்து விட்டார்கள்... என்ன கொடுப்பதென்று தெரியவில்லை.பிறந்து இரண்டு நாள் தானிருக்கும் 
தண்ணீரை நக்கி பார்த்தன..இலைகளை மோந்து பார்த்தன....ஒன்றும் நடக்கவில்லை.உடனே கடைக்கு சென்று பாட்டிலும்,பீடிங் ரப்பரும் வாங்கி வரசொன்ன என் மனைவி பாட்டிலில் பாலடைத்து ஆட்டுக்கு ஊட்டி விட்டாள் 



.நானும் கையில் வைத்து தடவி கொடுத்ததும் சற்றே ஆறுதலடைந்தன.எனினும் சொந்தக்காரர் வரவில்லை என்றால் என்ன செய்வது என்ற கவலை வேறு....

குட்டியை பிரிந்த ஆட்டின் நிலை பொறுக்காத ஆட்டுக்குட்டிகளின் சொந்தக்காரர் ஒரு வழியாக தேடி கண்டு பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.அவரிடம் ஆட்டு குட்டிகளை ஒப்படைத்ததும் கவலை தீர்ந்தது என்றாலும் குட்டிகளை பிரிகையில் சற்று கவலையாக தானிருந்தது......