Sunday 29 January 2012

மகாத்மாவைப்போற்றுவோம்
















                    அவதரித்தது :  2.10.1869  உதிர்ந்தது :  30.1.1948


வாழ்க நீ! எம்மான்,இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க!
............................................................................................
..................................................................................................


பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவிழி யென் றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர்-‘ஒத்துழை யாமை
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!

Saturday 28 January 2012

வாக்காளர் தினம்....

வாக்காளர் தினம்......
தொலைந்து போன காதலை நினைவூட்ட
 காதலர் தினம்.
மதிக்காமல் விட்டு விட்ட ஆசிரியரை மதிக்கும் 
ஆசிரியர் தினம்...
வீதியில்   தவிக்கவிட்ட அன்னையை கொண்டாடும் 
அன்னையர் தினம்.....  
தொலைந்து போன வாக்குரிமையை தேடும் 
வாக்காளர் தினம்......
.திருவிழாக்கள் வரும்போது தான் 
ஊரே களை கட்டும்.
தேர்தல் வரும்போது தான் 
நாடே களை கட்டும்.
தெய்வங்கள் வீதிக்கு வந்ததால் 
பூசாரிகள் வீடுகளுக்குள் நுழைகிறார்கள் .
மொய் கொடுத்து விருந்து வைக்கும் 
புத்தம்புது பார்முலாக்கள்.....
நடக்க முடியாத ஊர்களுக்கெல்லாம் 
புத்தம்புது பேருந்துகள்.
கேட்பதெல்லாம் கிடைக்கும் 
தேர்தல் முடிந்ததும் அனைத்தும் 
காணாமல் போகும் அதிசியங்கள்...
வாக்காளரை இருப்பதற்கு 
பெருமை கொள்வோம்..........

Sunday 22 January 2012

நேதாஜி

நேதாஜி என்றால் மதிப்பு மிக்க தலைவர் என்று ஹிந்தியில் பொருள். உண்மையில் அந்த சொல்லுக்கு பொருத்தமான தலைவராக வாழ்ந்து மறைந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் .
"அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் தலைவணங்கி போவதைவிட வெட்க கேடான செயல் எதுவுமில்லை "என்று முழங்கிய மாபெரும் தலைவர் நேதாஜி.
வெறும் வாய்சொல்லில் வீரம் பேசி சோரம்  போகும்   இக்கால அரசியல்வாதியல்ல
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ஒரிய மாநிலத்தில் கட்டாக் என்ற ஊரில் புகழ் பெற்ற வழக்கறிஞரான  ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி   தம்பதியருக்க ஒன்பதாவது குழந்தையாக  1897 ஆம் வருடம் ஜனவரி 23 தேதி பிறந்தார்..

ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல்  கட்டாக்ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல்,    கொல்கொத்தா மற்றும்  பிட்ஷ்வில்லியம்  காலேஜ்  ஆகிய  இடங்களில் படித்தார்.கல்லூரியில்  படிக்கும்போது  இந்திய மக்களுக்கெதிராக தரக்குறைவாக விமர்சித்த பேராசிரியரான   ஓடேன் என்பவரை தாக்கியதற்காக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  கல்வி கற்கும் போதே இந்திய தேச பற்றுடனே கல்வி கற்றார்
"உங்களில் சிலரை உன்னத மனிதர்களாக காண விரும்புகிறேன்; உங்களுக்காக அல்ல, இந்திய திருநாட்டை உன்னத நாடாக உயர்த்தும் உன்னத மனிதர்களாகவே காண விரும்புகிறேன். உங்களுடைய தாய்நாட்டின் சேவைக்காக உங்களை அர்ப்பணியுங்கள். அவளுடைய வளத்திற்காக செயலாற்றுங்கள், அவளுடைய இன்பத்திற்காக நீங்கள் துயரத்தை தாங்குங்கள்" என்ற ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகள் சுபாஷின் உள்ளத்தில் தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற தீயை வார்த்தது.
  கொல்கொத்தா மாகாணத்தில் மெட்ரிக் படிப்பில் முதலிடம்  பெற்ற போஸ் கொல்கொத்தா பல்கலை கழகத்தை சேர்ந்த 
ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்  1919  ஆண்டு தத்துவ இயலில் இளங்கலை .பட்டம் பெற்றார்.பின்னர் சிவில் சர்வீஸ் பயில இங்கிலாந்து சென்றார்.சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற அவர் வெள்ளையரிடம் அடிமை சேவகம் புரிய விரும்பாமல் பணியை உதறி தள்ளி சுதந்திர போரில் களம் இறங்கினார்.
 அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக  1923 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட  அவர் வங்க மாநில காங்கிரஸ் செயலராகவும் பணியாற்றினார்.மேலும் " முன்னேறு"என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு மாண்டலே சிறைக்கு    அனுப்பபட்டார்.அதன் விளைவாக காசநோயிற்கு ஆளானார். 1927 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலரானர். ஜவகர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றிய போஸ் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து போராடியதால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.. டிசம்பர் திங்கள் 1928 ஆண்டு கல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், `முழு சுதந்திர'த்திற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தீர்மானத்தை சுபாஷ் கொண்டுவந்தார். ஆனால் மகாத்மா காந்தியின் எதிர்ப்பு காரணமாக அந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த ஆண்டு (1929) லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸை நியமித்தார் ஜவஹர்லால் நேரு. 1930.ஆம் ஆண்டு கொல்கொத்தா மேயரானார்  இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி 1938 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.   



41-வது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், 1939 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மகாத்மா காந்தி நிறுத்திய பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து, மீண்டும் தலைவரானார். இத்தேர்தலில் போஸ் வெற்றிபெற கடுமையாக உழைத்தவர்களில் முக்கியமானவர் தேவர் திருமகனார் திரு .உ.முத்துராமலிங்கதேவர் ஆவார்.அவர் தென்னாட்டு பிரதிநிதிகளிடம் ஆதரவு திரட்டி வெற்றிபெற பாடுபட்டார்.    


பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி என்று காந்தி கூறினார். இது நேதாஜியை வருத்தத்தில் ஆழ்த்தியது.
மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிளால் அத்தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது. காந்திஜிக்கும், நேதாஜிக்கும் இடையே இவ்வாறு ஏற்பட்ட பல மோதல்களின் விளைவாக  கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் போது  காங்கிரஸ் தலைவர் பதவியை துறந்து . காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஃபார்வர்ட் பிளாக் (முற்போக்கு அணி)  என்ற அணியை தொடங்கினார்.
 
பார்வார்ட் பிளாக்கின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத தலைமை அவர் மூன்றாண்டுகளுக்கு எந்த பதவியையும் ஏற்க்க கூடாது என கட்டளை இட்டது.இரண்டாம் உலகப்போர் 1939 ஆம் ஆண்டு
 துவங்கியபோது பிரிட்டிசாரை எதிர்த்து பார்வர்ட் பிளாக் போராடியபோது 1940 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.அவர் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கியுடன் விடுவிக்கப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.,ஆகமொத்தம் 20  ஆண்டுகளில் 11 முறை கைது செய்யப்பட்டவர் போஸ். 
பிரிட்டிஷ் ஆட்சி போட்ட கட்டுக்காவலையும் மீறி,1941 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நேதாஜி தப்பி, ஆப்கானிஸ்தானம் ரஷ்ய வழியாக பெர்லினை அடைந்தார் .அங்கு சென்ற போஸ் ஜெர்மானியரின் ஆதரவுடன் ஆயுதம்  ஏந்தி போர் நடத்தி இந்தியாவிற்கு விடுதலை பெறவேண்டும் என்ற நிலையை எடுத்தார்.அது தான் அவர் தன வாழ்நாளில் செய்த வரலாற்று பிழை.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அவரது நிலையானது பாசிச,நாசிச கொள்கைகளைக்கொண்ட ,ஜனநாயக விரோத சக்திகளிடம் கொண்டு சேர்த்தது..... 


 விளைவு ....இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்.ஏராளமான வீரர்கள் அவருடன் இணைந்தனர்.சிங்கப்பூரில் இந்திய சுதந்திர அரசை நிறுவி பர்மா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது.தனி நாடு ,தனி ரூபாய், தனி வங்கி  ,தனி அரசு என்று இந்திய தேசிய ராணுவத்திற்கு .ஆரம்ப கால வெற்றிகள் கிடைத்தாலும் சூழ்நிலைகள் பாதகமாகவே அமைந்தது.இரண்டாம் உலகப்போர் முடுவுறும் நிலையில் ஜெர்மனி இத்தாலி படுதோல்வி அடைந்தனர்.ஜப்பானும் தோல்வியின் விளிம்பில் நின்றது. மஞ்சூரியா வழியாக ரசியா சென்று தொடர்ந்து போர் நடத்த திட்டம் தீட்டிய போஸ் 15.8.1945 அன்று தமது படையினரிடமும் ,இந்திய மக்களுக்கும் இறுதி உரையாற்றினார். 
"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன்
இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள்
நம்பிக்கையுடன் இருங்கள்உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள்எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
 இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் 
ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லைநீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும்ஜெய் ஹிந்த்!"

(
அவர் அன்று உரையில் குறிப்பிட்டபடியே சரியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆகஸ்ட் 15, 1947 ஆண்டு  இந்தியா விடுதலை பெற்றதுஅவர் விரும்பியவாறு அல்ல. . . இந்தியா - பாகிஸ்தானாக!)
 

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் நேதாஜி.

"
டெல்லிக்குச் செல்ல வழிகள் பல உள்ளதுடெல்லியே நமது நிரந்தர இலக்குமறந்துவிடாதீர்கள்." 










1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை சிங்கப்பூரில்  இருந்து பாங்காக் நோக்கி விமானம் மூலம் பயனமானார் நேதாஜிசிங்கப்பூர் விமான தளத்தில் கண்ணீர் மல்க அவருக்கு வழியனுப்பி வைத்தனர்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதிநேதாஜி பயணம் செய்த போர் விமானம் ஃபார்மோசா தீவுகளுக்கு அருகே விபத்திற்குள்ளானது என்ற ஜப்பானிய வானொலி அறிவித்தது.
 
ஜப்பான் வானொலியில் அவர்கள் கூறிய செய்தியைஇன்றுவரை எவரும் நம்பவில்லைஅவரது மறைவு மர்மமானது... இன்றுவரை அந்தபுதிர் விடுவிக்கப்படவேயில்லை.எனினும் என்றென்றைக்கும் இந்திய மக்களுக்கு அவர் அளித்த புத்துணர்வு மங்காதது.