Sunday 6 May 2012

கவிச்சக்கரவர்த்தி தாகூர் 

கவியரசர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்
வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார்
இந்தியாவின் முதல் நோபெல் பரிசினை இலக்கியத்திற்காக பெற்றவர்.
இந்திய கலாசாரத்திற்கும்,தத்துவத்திற்கும்.மேன்மைக்குமான
எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
தனது எட்டாம் வயதிலேயே கவிதை இயற்ற துவங்கியவர்,
தனது பதினாறாம் வயதில் சூரிய சிங்கம் என்ற பெயரில்
புகழ் மிக்க கவிதையை வெளியிட்டவர்.
தனது பதினாறாம் வயதிலேயே சிறு கதை மற்றும் நாடகத்தைவெளியிட்டவர்.


ஆங்கிலேய அரசுக்கெதிரான விடுதலைப்போரில் பங்கேற்றவர்.
ரவீந்தரநாத் தாகூர் தேவேந்திரநாத் தாகூர் சாரதா தேவி தம்பதியினருக்கு 
பதின்மூன்றாவது குழந்தையாவார்.இவர் 7.5.1861அன்று பிறந்தார்.
சட்டம் பயில பிரிட்டன் சென்றவர் இலக்கியத்தின் மேலுள்ள 
காதலால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.


1883ஆம் ஆண்டு மிருனாளினி தேவி என்ற பெண்ணை மணந்தார்.
1901ஆம் ஆண்டுசாந்தினி கேதனில் ஆசிரமத்தை நிறுவினார்.  
1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றார்.
1915ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு அவருக்கு செவ்வீரர் பட்டத்தை அளித்தது.
1919ஆம் ஆண்டுஅமிர்தசரசில் ஆங்கிலேய அரசின் கொடூர
நடவடிக்கைகளை கண்டித்து தமக்களித்த செவ்வீரர் பட்டத்தை துறந்தார்
1872ஆண்டு முதல் 1938வரையிலான காலங்களில் ஐந்து கண்டங்களை சேர்ந்த முப்பத்து ஒரு நாடுகளுக்கு சென்று வந்தார்.அவருக்கு எச்,ஜி,வேல்ஸ்,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட உலக புகழ் பெற்ற மேதைகளுடன் நட்பிருந்தது.
அவர் இயற்றிய ஏராளமான கவிதை ,கதைகள் காலம்
காலத்திற்கும் நிலைத்து நிற்பவை.











கீதாஞ்சலியும்,இந்திய தேசிய கீதம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
நீண்ட காலம் நோயவைப்பட்ட தாகூர் 7.8.1941அன்று காலமானார்.


இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம் !
நன்றி:தமிழாக்கம்:சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada

No comments:

Post a Comment