Wednesday 24 October 2012

விஜயதசமி

விஜயதசமி 
புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
24.10.12 விஜயதசமி அலங்காரம்
 ஸ்ரீ தாய் மூகாம்பிகை   அலங்காரம்.....
நவராத்திரி,விஜயதசமி விழாவை முன்னிட்டு  அம்மனுக்கு 
 அலங்காரத்தை சிவஸ்ரீ காளீஸ்வர குருக்கள் செய்திருந்தார்.
சிவஸ்ரீ விஸ்வநாத சிவாச்சாரியார் ,
சிவஸ்ரீ கணேச சிவம், சிவஸ்ரீ சுரேஷ் சிவம், 
ஆகியோர் தினந்தோறும் துர்கா.லக்ஷ்மி.சரஸ்வதி.சப்தசத் பாராயணமும்.கவச ஆகானம்,பூஜை,ஹோமம்
.ஜப பாராயணம்,பூர்ணாஹுதி,விசேச அபிசேகமும்,
தீப ஆராதனையும் சிறப்பு பூஜைகளும்  செய்தனர்..........

நவராத்திரி கொலு

நானும் எனது மனைவியும் கோவிலுக்கு நவராத்திரி
 விழாவிற்கு சென்றிருந்தோம்.
கோவிலில் அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்திருந்தார்கள்
.அம்மனுக்கு காளீஸ்வர குருக்கள் மிக பிரமாதமாய் அலங்காரம் செய்திருந்தார்.கோவிலில் சாரதா நவராத்திரி மகளிர் குழு 
சார்பில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது.
எனது மனைவி அக்குழுவில் ஒருவர்.சில வருடங்களுக்கு
 முன்னர் அவளும்,ஜானகி மாமியும்  மதுரைக்கு சென்று 
நிறைய பொம்மைகள் வாங்கி கொண்டு வந்தனர்.
பொதுவாகவே கொலு பார்ப்பதற்கு வேடிக்கையாய் இருக்கும்
.அது ஒரு வித்தியாசமான உலகம்.சின்ன வயதில் மதுரையில்
 நிறைய கொலு பார்த்து மகிழ்ந்ததுண்டு.
கடவுள் பொம்மைகள்.பக்கத்திலே செட்டியார் தானிய
 வியாபாரம் செய்து கொண்டிருப்பார்.சம்பந்தமேயில்லாமல் 
புலி பக்கத்திலே நின்று கொண்டிருக்கும்...
அந்த கொலுக்களுக்கு பசங்க நாங்களே மதிப்பெண் போடுவோம்.
எந்த வீட்டில் சுண்டல் அதிகம் கிடைக்கிறதோ அந்த வீட்டிற்கு
 அதிக மதிப்பெண் போடுவோம்.....
வளர்ந்த பின்னர் இதெல்லாம் பெண்களுடைய விவகாரம்
 என்று எட்டிக்கூட பார்ப்பதில்லை.
இந்த வருடம் எனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று
 வருகையில் அருகிலுள்ள வீட்டில் கொலுவை பார்க்க 
என் மனைவி அழைத்தாள்,கொலு நன்றாக இருந்தது.
அதே போல எனது நண்பர் செந்தில்   தனது வீட்டில்
 அமைந்துள்ள கொலுவை பார்க்க அழைத்தார். சென்று பார்த்தேன்
.சிறப்பாய் இருந்தது.ஓர் விசயமும் புரிந்தது
.கொலு  அமைப்பதில் பெண்களின் வெற்றிக்குப்பின்னால் 
ஆடவரின் பங்கு இருக்கிறதென்று.....  

Tuesday 23 October 2012

நவராத்திரி

புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
23.10.12 ஒன்பதாம்   நாள் அலங்காரம்
 ஸ்ரீ சரஸ்வதி  அலங்காரம்.....

Monday 22 October 2012

நவராத்திரி VIII

புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
22.10.12 எட்டாம்  நாள் அலங்காரம்
 ஸ்ரீ கனகதாரா அலங்காரம்.....

நவராத்திரி VII

புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
21.10.12 ஏழாம்   நாள் அலங்காரம்
 ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்  அலங்காரம்.....

Sunday 21 October 2012

நவராத்திரி VI

புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
20.10.12 ஐந்தாம்  நாள் அலங்காரம்
 ஸ்ரீ சாகம்பரி   அம்மன்  அலங்காரம்.....

Saturday 20 October 2012

நவராத்திரி V

புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
19.10.12 நான்காம் நாள் அலங்காரம்
ஸ்ரீ ரோகினி  அம்மன்  அலங்காரம்.....