Monday 31 December 2012

வருக வருக புத்தாண்டே!



வருக வருக புத்தாண்டே!
வந்து நலம் தந்திடுவாய் புத்தாண்டே!
சென்ற ஆண்டின் சுவடுகளின்
இனிமை தொடர்ந்திடவும்
கடந்த ஆண்டின்
கசப்புகள் மறந்திடவும்
எதிர்காலத்தில் புதுப்புது
நம்பிக்கை மலர்ந்திடவும்
வசந்தத்தின் வாசலாய்
வந்திடுவாய் புத்தாண்டே!


Tuesday 25 December 2012

சுனாமி




உயிர்த்தெழுந்த 
நில அதிர்வு......
அதிர்ந்த பூமி
ஆயிரக்கனக்கில்
மனிதர்களின்
சவக்குழியானது........

சுழன்றடித்த சூறாவளி
வெகுண்டெழுந்த 
வெள்ளக்காட்டில்
அநேகர் அழிந்தனர் 
சிதைந்தது 
இயற்பு வாழ்க்கை......

உபரியான 
மனித கணக்கை 
சமன் செய்ததா
இயற்கை?
சுற்றுச்சூழலை 
சுத்தமாக்கியதா
சுனாமி?

(இன்று சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் 
26.12.2004)

Wednesday 19 December 2012

விநோதம் பாரீர்....

எவ்வளவு பெரிய பூ....
                                                         எவ்வளவு அழகாய்.....
எவ்வளவு பெரிய முருங்கை காய்
                                                                   பச்சை பாம்பா........


Sunday 2 December 2012

கடன் வாங்கி.......



இப்படியாகத்தான் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதிதன் வேதாளத்தை......என்ற வரிகளைப் படிக்கும் போது விக்ரமாதித்தன் கதைகள் உன்மையா பொய்யா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுவது வழக்கம். ஆனால் ஒரு தனியார் வங்கி நன்பர் என்னிடம் பெர்சனல் லோன் வாங்க வலியுறுத்தி செய்த முயற்சிகளைப் பார்த்த போத அந்த கதை உண்மை என்று தான் தோனியது. அவரது ராபர்ட் புரூஸின் விடா முயற்சி எனது மன உறுதியை தளரச்செய்துவிட்டது.
சின்ன வயதில் எனது தந்தையாரின் போதனைகள் கடனே வாங்கக்கூடாது என்கிற எண்ணத்தை மனதில் ஆழமாக பதிந்திருந்தது.அவர் வழக்கமாக ஒரு பாடலைக்கூறுவார்...
வைரஅட்டியலுக்கு ஆசைப்பட்டு
வட்டிக்கு கடன் வாங்கி
அட்டியலை வாங்கி
வட்டி கட்ட முடியாம
அட்டியலை விற்று
வட்டிய கட்டி விட்டு
அட்டியலும் போய்
கடனும் அவமானமும்
தங்குனது தான் மிச்சம்......

என்னுடைய ஆசிரியர் மாப்போசானின்'' தி நெக்லஸ்'என்ற கதையை பாடமாக நடத்தும்போது  ஆடம்பரமாய் இருக்க ஆசைப்பட்டு தோழியிடம்  நெக்லஸ் கடனாய் பெற்று அது தொலைந்ததால் ஊரெல்லாம் கடன் வாங்கி பதலி நெக்லஸ் விலைக்கு வாங்கி திருப்பி கொடுத்து விட்டு வாழ்க்கையை சீரழித்த நடுத்தர வகுப்பினைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கதையை சுவாரஸ்யமாய் கூறுவார்.

சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் தேவை சார்ந்ததா.என்பது பற்றியும் கடன் வாங்குவது பற்றியும் நிறைய விவாதித்தது நன்றாய் இருந்தது..
ஆசைக்கும் தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்தாலே தேவையில்லாமல் கடன் வாங்கும் எண்ணம் வராது.

ஆனால் சென்னையில் பணியாற்றும் எனது மகனின் பர்ஸை பார்த்தால் நிறைய கிரெடிட் கார்டுகள்....கேட்டால் தத்துவமாய் பொழிகின்றான்.
அரசாங்கம் தான் வழிகாட்டுகிறது என தத்துவம் பேசுகிறான்.
ஒவ்வொரு இந்திய குடிமகனை கேட்காமலேயே ஒவவொருத்தன் பேரிலும் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறது தெரியுமா என கேள்வி வேறு.....

எனது நன்பர் ஒருவர் திரும்பிய பக்கம் எல்லாம் பெர்சனல் லோன்,கிரெடிட் கார்டு என கடன் வாங்கி குவித்தார்.எதிர்பாராத விதமாய் ஒரு விபத்தில் சிக்க பணம் கட்டமுடியாமல் மண்டை காய்ஞ்சு போனார்.

ஓவையார் அப்பவே பாடிவிட்டார்...
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதி கெட்டுப்போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் ஒல்லனாம் நாடு....

அது சரி.....
கடனாளியானால் கேவலப்படுவது தனி மனிதன் மட்டும் தானா...நாடு இல்லையா....

Tuesday 20 November 2012

திருக்கல்யாணம்

                                                     
கந்தர் சஷ்டி திருவிழாவினைத்தொடர்ந்து அருள்மிகு முருகன்,வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்19.11.2012 அன்று புதுக்கோட்டை ஸ்ரீ அய்யப்பன் திருக்கோவிலுள் அமைந்திருக்கும் ஸ்ரீ முருகன்,வள்ளி தெய்வானைசன்னதியில் நடைபெற்றது.அதன் காட்சிகள் சிலவற்றை காணலாம்


.











Tuesday 13 November 2012

தீபாவளி

                                                இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 
                                                                   புதுகை செல்வா 


Wednesday 7 November 2012

மரம்

மரம் 
ஆதி மனிதனின்
 முதல் ஆலயம்..
ஆதி மனிதனிலிருந்து 
ஆயிரமாயிரம் பறவைகளின் 
சரணாலயம்...
குனிந்து நட்டவனையும் 
அண்ணாந்து பார்க்கவைக்கும் 
அதிசயம்.....
அள்ள அள்ள குறையாது 
அள்ளிக்கொடுக்கும் அற்புதம்....
அழித்தாலும் மனிதனை
மன்னித்து வாழவைக்கும் 
தாய்....
வழிபடவேண்டிய மரங்களை 
அழிக்காமல் பாதுகாப்போம்........
 \













Wednesday 24 October 2012

விஜயதசமி


விஜயதசமி 
புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா நகரில்  அருள்காத்துவரும்
 பூர்ண புஷ்கலை  சத்தியக சமேத தர்மசாஸ்தா ஆலயத்தில்
 சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் 
அருள்பாலித்து கொண்டுள்ள
 ஆதிபராசக்திசபரிதுர்கையின் சாரதா நவராத்திரி விழா
24.10.12 விஜயதசமி அலங்காரம்
 ஸ்ரீ தாய் மூகாம்பிகை   அலங்காரம்.....
நவராத்திரி,விஜயதசமி விழாவை முன்னிட்டு  அம்மனுக்கு 
 அலங்காரத்தை சிவஸ்ரீ காளீஸ்வர குருக்கள் செய்திருந்தார்.
சிவஸ்ரீ விஸ்வநாத சிவாச்சாரியார் ,
சிவஸ்ரீ கணேச சிவம், சிவஸ்ரீ சுரேஷ் சிவம், 
ஆகியோர் தினந்தோறும் துர்கா.லக்ஷ்மி.சரஸ்வதி.சப்தசத் பாராயணமும்.கவச ஆகானம்,பூஜை,ஹோமம்
.ஜப பாராயணம்,பூர்ணாஹுதி,விசேச அபிசேகமும்,
தீப ஆராதனையும் சிறப்பு பூஜைகளும்  செய்தனர்..........




நவராத்திரி கொலு



நானும் எனது மனைவியும் கோவிலுக்கு நவராத்திரி
 விழாவிற்கு சென்றிருந்தோம்.
கோவிலில் அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்திருந்தார்கள்
.அம்மனுக்கு காளீஸ்வர குருக்கள் மிக பிரமாதமாய் அலங்காரம் செய்திருந்தார்.கோவிலில் சாரதா நவராத்திரி மகளிர் குழு 
சார்பில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது.
எனது மனைவி அக்குழுவில் ஒருவர்.சில வருடங்களுக்கு
 முன்னர் அவளும்,ஜானகி மாமியும்  மதுரைக்கு சென்று 
நிறைய பொம்மைகள் வாங்கி கொண்டு வந்தனர்.
பொதுவாகவே கொலு பார்ப்பதற்கு வேடிக்கையாய் இருக்கும்
.அது ஒரு வித்தியாசமான உலகம்.சின்ன வயதில் மதுரையில்
 நிறைய கொலு பார்த்து மகிழ்ந்ததுண்டு.
கடவுள் பொம்மைகள்.பக்கத்திலே செட்டியார் தானிய
 வியாபாரம் செய்து கொண்டிருப்பார்.சம்பந்தமேயில்லாமல் 
புலி பக்கத்திலே நின்று கொண்டிருக்கும்...
அந்த கொலுக்களுக்கு பசங்க நாங்களே மதிப்பெண் போடுவோம்.
எந்த வீட்டில் சுண்டல் அதிகம் கிடைக்கிறதோ அந்த வீட்டிற்கு
 அதிக மதிப்பெண் போடுவோம்.....
வளர்ந்த பின்னர் இதெல்லாம் பெண்களுடைய விவகாரம்
 என்று எட்டிக்கூட பார்ப்பதில்லை.
இந்த வருடம் எனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று
 வருகையில் அருகிலுள்ள வீட்டில் கொலுவை பார்க்க 
என் மனைவி அழைத்தாள்,கொலு நன்றாக இருந்தது.
அதே போல எனது நண்பர் செந்தில்   தனது வீட்டில்
 அமைந்துள்ள கொலுவை பார்க்க அழைத்தார். சென்று பார்த்தேன்
.சிறப்பாய் இருந்தது.ஓர் விசயமும் புரிந்தது
.கொலு  அமைப்பதில் பெண்களின் வெற்றிக்குப்பின்னால் 
ஆடவரின் பங்கு இருக்கிறதென்று.....