Wednesday 25 April 2012

ஆதி சங்கரர்


ஆதி சங்கரர் பாரத தேசத்தின் மகா தத்துவ ஞானிகளில் ஒருவர்இன்றைய கேரளாவை சேர்ந்த காலடி என்ற ஊரில் அவதரித்த ஆதி சங்கரர்சீர்கெட்டு ,பிளவு பட்டிருந்த சனாதன மதத்தை தட்டியெழுப்பிய மேதை
வேத உபநிஷத்துகளுக்கும்,பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதி அத்வைத வேதாந்தத்திற்கு உயிரூட்டியவர்.
பகவத் கீதைக்கும்,விஷ்ணு சஹாஸ்ரனாமத்திர்க்கும் உரை எழுதியவர்.
பாரத தேசமெங்கும் பவனி வந்து  சிருங்கேரிபூரிதுவாரகாபத்ரிநாத் ஆகிய இடங்களில் அத்வைத மடங்களை உருவாக்கி ஹிந்து மதத்திற்கு புத்துனர்சியூட்டியவர்.
தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.
இன்று 26.04.2012 ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.

Friday 20 April 2012

பஜ கோவிந்தம்.



இறைவனுடைய படைப்பில் மனிதன் மட்டுமே தனது வாழ்க்கையை,
இச்சையை தேர்ந்தெடுக்கும் உரிமை படைத்தவனாக இருக்கிறான்.
தேர்ந்தெடுக்கும் தன்மை (Free will) என்பது தனித்தன்மை வைத்ததாகும்.
விலங்குகள் கடவுள் தீர்மானித்துள்ள வாழ்க்கையை நடத்தி வருபனவாகும்.

(1)சுய இச்சையை பொறுத்த மட்டில் இரு விதமான மனப்பாங்குகள் உள்ளன.
எது வகுக்கப்பட்டிருக்கிறதோ,ப்ராப்தம் எதுவோ அதுபடியே நடக்கும் என்கிற மனப்பாங்கு ஒன்று..
(2)சுயமாக தீர்மானிக்கும் தன்மை (Free will) உள்ளது என்பது மற்றொன்று.
இது பற்றி சாஸ்திரம் என்ன கூறுகிறது?
Free will சுய இச்சையையே சாஸ்திரம் ஏற்றுக்கொள்கிறது.
அவனுக்கே சாஸ்திரம் உதவுகிறது.
வெறும் பிராப்தத்தை நம்புவதை சாஸ்திரம் ஏற்றுக்கொள்வதில்லை.
வாழ்க்கையின் குறிக்கோள் என்பது முக்கியமானது.
*எந்த குறிக்கோள் நித்திய சுகத்தை தருகிறது?  
*எந்த குறிக்கோள் அநித்திய சுகத்தை தருகிறது?  

வெளியிலிருக்கும் வஸ்துவிடமிருந்து (பொருள்) வருவதல்ல சுகம்.
அது நம்மிடையே உள்ளதாகும்.
உதாரணமாக மலைபிரதேசத்திலிருக்கும்போது சூரிய கிரணங்கள்
நமக்கு சுகத்தை தருகிறது.அப்போது நமக்கு விருப்பமான வ்ருத்தியாக உள்ளது.
அதே சூரிய கிரணங்கள் நாம் வெப்ப பிரதேசத்திலிருக்கும்போது கஷ்டத்தை
தருவதாக உணர்கிறோம்.அப்போது அது நமக்கு விரும்பத்தக்கதாக இருப்பதில்லை.
வெளியிலிருந்து வரும் சுகம் நமக்கு நித்தியமாக இருபதில்லை.
அந்த சுகம் ஏற்படும் இடம் எங்கே உள்ளது?
அது என்னிடமே உள்ளது.
அதுவே நித்தியமானது....
ஆனந்தமானது....... 
தரும் விசயங்களின் வஸ்துகள் வெளியில் உள்ளது அநித்தியமாகவே உள்ளது.
நாம் அன்றாடம் ஆனந்தத்தை தேடுகிறோம்,
ஆனால் அது எப்போதுமே கிடைக்கிறதா?
சுகத்தை தவறான இடத்தில் தேடுகிறோம். 
அனுபவத்திற்குப்பின் சரியான பாதையை காண்கிறோம்.
பொதுவாக சம்சார அனுபவம் துன்பம் என்றே கூறுகிறோம்.அது தவறு.
சம்சார தரிசனம் இருந்தால்தான் யோக தரிசனமே கிடைக்கும்.
நித்தியமான ஆனந்தம் எவை?
ஈஸ்வரன் .பிரம்மம்,மோட்சம்.....
மோட்சத்தின் மீது இச்சையேநித்தியமான ஆனந்தம்.சம்சாரத்திடமிருந்து விடுதலை.
இதை ப்ரேயஸ் என்கிறோம் .இது ஒரு சிலரது குறிக்கோள் ஆகும்.
அநித்தியமான ஆனந்தம் எவை?
உலகில் நாம் காணும் அநேக சுகங்கள் ....
ஏராளமானவை.....
அர்த்த,காம,கர்மம்.பணம்...பதவி...பட்டம்...
இச்சை எத்தன மீது?
ஸ்ரேயஸ்
கடவுளின் மீது .....கடவுளே கதி...
கடவுள் என்பவன் யார்.?
கட+உள்....உள் கடந்து செல்பவன்.
இந்த பாதையை தேர்ந்தெடுப்பவன் 
தீரன் :விவேகி .....
ப்ரேயஸ் 
உலகம்....
உலக பொருட்கள்
உலக பந்தங்கள்....
இந்த பாதையை தேர்ந்தெடுப்பவன் 
மூடன்.அவிவேகி.
பஜ கோவிந்தத்தின் நோக்கம் அவிவேகியை விவேகியாக மாற்றுதல் .
கஷ்டங்களை உணர்பவனை அதன் தன்மையை உணரவைத்து 
வைராக்கியம் பெறுவதன் மூலம் நித்யானந்தத்தை அடைதல்.....
உலகமே கதிஎன்றிருப்பவனை கடவுளே கதியென்ற நிலைக்கு கொண்டுவந்து 
மோட்சத்தில் இச்சை உள்ளவனாக மாற்றுவது........
ஆன்மீக சிந்தனை இல்லாதவனை இரு வகையாக பிரிக்கலாம்.
(1) நாத்திகன்.
(2)கடவுள் மீது நம்பிக்கை உண்டு.
மோட்சம் பற்றி தெரியாது.ஆன்மீக ஈடுபாடு இல்லாதவன்.
இவனுக்காக எழுதப்பட்டது தான் பஜ கோவிந்தம்.
கடவுளை நம்புபவனை கடவுளே கதி என்ற நிலைக்கு மாற்றுவது.
விவேகி கடவுளே கதி என்ற நிலையில் உள்ளவன்.
அவிவேகி கடவுளை நம்புபவன்.சம்சாரத்தில் அடிபட்டு புத்தி பெறுபவன்.
நாத்திகன்மிருக வகை.விதண்டாவாதி. 
எனவே மோட்சத்துக்கு அனுகூலமாக உள்ள குறிக்கோளையே 
நாம் கொண்டிருக்க வேண்டும்.அல்லது பிரதிகூலமாக உள்ளவியே,பிரதிகூலமான விசயங்களையே அனுகூலமான விசயமாக மாற்ற வேண்டும்.அவனே அறிவாளி.
From animal man to Man man to God man and finally to GOD.
வைராக்கியம் வேண்டும்,விவேகம் வேண்டும்.இதுவே பஜ கோவிந்தத்தின் நோக்கம்.
ஒரு முறை ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் காசி நகர வீதி ஒன்றில்
வந்து கொண்டிருந்தாராம்.அப்போது ஒரு என்பது வயது முதியவர் 
"டூக்ரிஞ்ச்கரனே "என்று இலக்கண விதிகளை நெட்டுரு 
போட்டுக்கொண்டிருந்தாரம்.கேவலம் புத்தி சாமர்த்தியத்தை காட்ட
செய்யப்படுகின்ற வீண் முயற்சிகளைக்கண்ட ஆதி சங்கரர் இப்பாடல்களை பாடியதாக கூறுவர்.
வயது முதிர்ந்த அந்தனறது செயலை நிமித்தமாக கொண்டு
உலகத்தார் உய்வுற வேண்டி பஜ கோவிந்தம் பாடப்பட்டதாக கூறுவர் . 
பஜ கோவிந்தத்தை "மோக முக்ரஹா "என்று அழைப்பர்.
மோகம்=அறிவின்மை,குழப்பம்.
முக்ரஹா=சுத்தி .
ஞானத்தை சுத்தியால் அடித்து மண்டையில் ஏற்றுதல் அல்லது குழப்பத்தை,
மோகத்தை சுத்தியால் அடித்து நீக்குதல் என கொள்ளலாம். 
பஜ கோவிந்தத்தில் 31ஸ்லோகங்கள் உள்ளன.அதில் முதல்12 ஸ்லோகங்கள் மட்டுமே ஆதி சங்கரால் அருளப்பட்டது.
மீதி ஸ்லோகங்கள் அவரது சீடர்களால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பாடப்பட்டதாக கூறுவர்.
*குறிக்கோள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
*முமுட்சம் அதுவே தேவை.
*சரியான பாதையை தேர்ந்தேடுத்தால் இந்த உலகம் சொர்க்கம்.
*தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் இந்த உலகம் நரகம்.
*நான் யாரென்று உணர்ந்தால் இந்த உலகம் மோட்சம்.
*நான் யாரென்று தெரியவில்லை என்றால் இந்த உலகம் நரகம்.
மின்மினி பூச்சி எரியும் நெருப்பில் ஆகர்ஷிக்கப்பட்டு அதிலே விழுந்து மடிகிறது
மீன் தூண்டிலில் உள்ள இறையால் கவரப்பட்டு துக்கத்தில் சிக்கி அழிகிறது.
இது இயற்க்கை.
ஆனால் பகுத்தறிவு உள்ள மனிதன் சம்சாரத்தில் சிக்கி அழிவானேன்............
தொடரும்.

கிராமத்து திருவிழாக்கள்...........

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் தாலுகா ஏரியூர் 
கிராமத்தை சேர்ந்த காவல் தெய்வ திருவிழா காட்சிகள்.....


கரும்பு தொட்டிலில் குழந்தைகளை 
எடுத்து வந்து நேர்த்திக்கடன்...








தீ மிதித்த பூக்குழி........

கிராமத்து திருவிழாக்கள்.

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் தாலுகாவை சேர்ந்த 
மாம்பட்டி கிராமத்தில் காவல் தெய்வம்
ஸ்ரீ காடுகாவலன்,நல்லிங்க அய்யனார் கோவிலில்
புரவி எடுப்பு திருவிழா 6,7.4.12அன்று.நடைபெற்றது.
அந்த திருவிழா காட்சிகளில் சில........



கிராமத்து பிரமுகர்கள் முன்னிலை வகித்து வர.....
    

சாமியாடிகளின் ஆட்டத்துடன் 








                                                   அரிச்சந்திரா புராண நாடகம்........




நம்மை காக்க வேண்டி ஆடு பலியிடுகிறோம்....
அந்த ஆட்டை பாதுகாக்க யாரிடம் முறையிடுவது?





Friday 13 April 2012

பட்டுக்கோட்டையார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தோற்றம்:13.04.1930
மறைவு:8.10.1959



வாழ்ந்த காலத்திலேயே  
மக்கள் கவிஞனென
மாநிலத்தில் பேரெடுத்து
வயது முப்பதுக்குள்
சத்தான கருத்துகளை 
முத்தான பாடல்களால்
பாடி மறைந்த 
பட்டுக்கோட்டையாரின் பிறந்த 
தினமிது............
தூங்குபவனையும் தட்டியெழுப்ப எழுதிய எழுச்சி பாடல் 


மூட நம்பிக்கையில் ஆழ்ந்துவிடாதே என்று 
குழந்தையின் வழியாக பெரியவர்களுக்கு பாடிய பாடல்     

திருட்டு புத்தி இளம்வயதில் தொற்றிவிடாமலிருக்க
எழுதிய பாடல்  


வாழ்க்கையின் தத்துவத்தை போற்றிய பாடல் 


காதலுக்கு துணையாக நிலவை அழைத்த பாடல்.........

தில்லை அம்பல நடராஜனை வணங்கிய பொதுஉடைமைவாதி .....

மானுடம் பாடிய மக்கள் கவிஞனுக்கு மக்கள் செலுத்திய அஞ்சலி.

Thursday 12 April 2012

தமிழன்னையை வணங்குவோம்.


ஸ்ரீ நந்தன வருடம் 
நல்லனவெல்லாம் தந்திட 
தமிழன்னையை வணங்குவோம்.

Monday 9 April 2012

எந்த தெய்வத்தின் கோலமிது?



இந்த சிலை எந்த தெய்வத்தின் ரூபமென்று தெரிகிறதா?
உயிர்க் கொலையினை வெறுத்து உலக பந்தங்களை
துறந்த மகாவீரரின் சிலை தான்.
எந்த காலத்திலோ சகிப்பு தன்மை இல்லாத
விஷமிகளின் கைங்கர்யத்தால் தலை உடைக்கப்பட்ட
சிலை தான் அது.
அதைவிட கொடுமை சிலைக்கு முன்
வேலை நாட்டி அவரையும் ஆயுதபாணிகளாக்கி 
விட்டார்கள்.....
புதுக்கோட்டை மாவட்டம்,
நார்த்தாமலையிலுள்ளசிலை தான் அது,, 

நார்த்தாமலை தேரோட்டம்

அருள்மிகு நார்த்தாமலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூசொரிதல்விழாவின் நிறைவாக தேரோட்ட திருவிழா 9.4.2012 அன்று நடைபெற்றது.


கோவில் மாட்டிற்கு வழிபாடு.


சாமியாடிகள்.

காண கண்கோடி வேண்டும்.......
ஊர்கூடி தேரிழுக்கும் அழகைக்காண...






திருவிழா காண கூட்டம்.

இளசுகளின் ஆட்டம்...

அம்மனிடம் வரம் கேட்ட கையோடு
குறியும் கேட்டுக்கொண்டு.................. ?!