Monday 9 January 2012

யார் இந்த பென்னி குக்?



"மாடு கட்டி போரடித்தால்
மாளாது சென்நெல்லென்று
யானை கட்டி போரடித்த
அழகான தென் மதுரை
"
என்று ஒரு அழகான பைந்தமிழ் பாட்டொன்று உண்டு......
மதுரை நகர மக்களுக்கென்று என்று எப்போதுமே ஒரு தற்பெருமை உண்டு. மதுரை மீனாட்சியால் ஆப்பட்ட ஊரல்லவா?
சொக்க நாதருக்கும் மதுரை மீனாட்சிக்கும் திருமணம் நடத்திய ஊரெல்லவா.ஆனாலும் அப்பேர்ப்பட்ட மீனாட்சியின் திருமணம் நடந்த போது பெய்த மழையில்  வைகையாறு பெருகிவர அவளது  தமையனார் கள்ளழகர் மதுரைக்குள் நுழைய முடியாமல் வைகையாற்றின் வடகரையில் காத்திருந்துவிட்டு திரும்பியதாக புராணம் உண்டு,
அதே போல பாண்டியன் காலத்தில் வைகை வெள்ளபெருக்கத்தை கட்டுப்படுத்த வீட்டுக்கொரு ஆள் வந்து வேலை செய்ய உத்தரவிட ,பிள்ளையற்ற வந்தியின் வேலையாளாய் சிவபெருமான் வந்து பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது,அதெல்லாம் புராண கதைகள்... மாதம் மும்மாரி மழை பொழிந்த காலம்.
பிற்க்காலத்திற்க்கு வருவோம் ........
வியாபாரத்திற்கு இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களாக மாறிய காலம்,
அகப்பட்டதை எல்லாம் சுருட்டிக்கொண்டு வெள்ளையர்கள் கொண்டுபோனார்கள் ....இருந்த ஆட்சி முறைகளை உடைத்து எறிந்தனர் .இருந்த ஊராட்சி முறைகளை அகற்றிவிட்டு ஜமீந்தார்களை உருவாக்கினர்.இந்த வரலாற்றை எல்லாம் வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.விளைவு ..கிராமப்புறங்கள் சீரழிந்தன.....பஞ்சங்கள் ..பட்டினி சாவுகள்......
மதுரை, ராமநாத புரம், பிரதேசங்களில் இருந்த பஞ்சத்தை போக்க அன்றைய ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைகட்டிட திட்டம் வகுக்க முத்து இருளப்ப பிள்ளை தலைமையில் பன்னிருவரைக்கொண்ட ஒரு குழுவை 1798ஆம் ஆண்டு அனுப்பினார்.நிதி ஆதாரம் இல்லாததால் திட்டம் கைவிடப்பட்டது.
மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் எழுபத்தைந்து லட்சம் ருபாய் மதிப்பில் அணைகட்ட 1893ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டது ..அணை வேலைகள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென பெய்த மழையாலும் நீர் ப்பெருக்காலும் பாதி கட்டிய நிலையில் அணை உடைந்த்தது.தொடர்ந்து அணையை கட்ட ஆங்கில அரசாங்கம் நிதியை ஒதுக்க மறுத்த நிலையில்  கர்னல் ஜான் பென்னி குவிக், துணைவியாருடன் தனது நாட்டிற்கு சென்று ,தனது சொத்துக்களை விற்று பணத்தைக்கொண்டு வந்து அணையை 1896 ஆம் ஆண்டு கட்டி முடித்தார். நண்பர்கள் கேட்டதற்கு இந்த பூவுலகில் நாம் பிறப்பது ஒரே முறை தான்.அந்த காலத்தில் இந்த மனித சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றாராம்.





இந்த காலத்தில் செய்கிற எந்த வேலையாக இருந்தாலும் அதில் கமிசனை எதிர்பார்க்கிற அரசியல்வாதிகள் ..அரசு ஊழியர்கள் ..காண்டிராக்டர்கள் என ஆளாளுக்கு வெட்டி எடுத்து திட்டங்களை சீரழிக்க கூடிய நிலையில் ,எங்கோ பிறந்து மனித சமுதாயத்திற்க்காக தன சொத்தை விற்று அணை கட்டினாரென்றால் அவன் தான் மனிதனில்லை....தெய்வம் என அவரால் பயனடைந்த தேனி  மதுரை சிவகங்கை  ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடும் விவசாயிகளும் பொது மக்களும் வணங்குகிறார்கள்.நான் கூட இந்த பிரச்சனையின் போது பேசப்படும் ஒரு பொறியாளர் என்று தான் நினைத்தேன்.ஆனால் தேனி மாவட்டத்தில் சுற்றி வரும்போது சின்ன குக்கிராமங்களில் கூட மதிக்கப்படும் மனிதர் என்பதை அவருக்கு வைக்கப்பட்டிருந்த சிலை படங்கள் மனிதரின் உச்சரிப்புகளில் இருந்து தெரிந்து கொண்டேன்,இது வாய் ஜாலத்திற்க்காக மட்டும் தேசிய ஒருமைப்பாட்டையும் ,மனித நேயத்தையும் ,பேசுகிற உம்மன் சாண்டிகளுக்கும் அச்சுதானந்தன்களுக்கும் இதர அரசியல் வாதிகளுக்கும் புரியாது.இந்த மனித தெய்வத்திற்கு மணிமண்டபம் கட்ட முடிவெடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி கூற   கடமைப்பட்டிருக்கிறோம்.

1 comment:

  1. மாணிக்க மனிதர். போற்றப் பட வேண்டியவர்தான். ஆனால் அவரைப் போற்ற இப்படி ஒரு காலச் சூழ்நிலை அமைய வேண்டியதிருக்கிறது!

    ReplyDelete