ஒருமுறை ராமநாதபுரம் சென்றிருந்தபோது அருகே கடற்கரையை பார்க்க சென்றிருந்தேன். அங்கு ஒரு 50, 60 பேர் சேர்ந்து கடலில் இருந்து வலையை இழுத்துக் கொண்டிருந்தனர். விசாரித்த போது முதல் நாளே கடலில் வலையை போட்டுவிட்டு வந்து விடுவார்கள். மறுநாள் வலையின் இரு புறமாக ஆட்கள் இருந்து இழுத்துக்கொண்டே வருவார்கள். கடைசியாக வலையில் சிக்கி இருக்கக்கூடிய மீன்களை அள்ளுவார்கள். நான் சென்றிருந்தபோது வலையில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் பெரும்பகுதி மீன்கள் தப்பி சென்று விட்டன. பாவம் குறைவான அளவு தான் அவர்களுக்கு கிடைத்தது. வந்த மீன்களை விட இழுக்கின்ற ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி அதிகம் என்று புலம்பினார்கள். கஷ்டமாக இருந்தது...
Sunday, 5 January 2025
Subscribe to:
Post Comments (Atom)
எச்சரிக்கை
தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
40 ஆண்டுகளுக்கு முன் தைத்திங்களில், இதே நாளில், (10.02.1986)இனிய மாலைப் பொழுதினிலே, ஒரு கல்விச்சாலை தன்னிலே, ஒரு எளிய, சுயமரியாதை, சாதி மறுப...
No comments:
Post a Comment