"*தோழர் கவிஞர் தணிகைச் செல்வன் [90] அவர்களுக்கு அஞ்சலி!*
70களில் மிகப் பிரபலமான இடதுசாரி கவிஞர்களில் முதன்மையானவராக தோழர் தணிகைச் செல்வன் திகழ்ந்தார்.
*"எல்லாம் இழந்தோம் இனி இழப்பதற்கு ஏதுமில்லை"*
*கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்*
*துணியினை இழந்ததாலே திரவுபதை சபதம் நியாயம்*
*தனது மண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்*
*அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் நியாயம்.*
*தாக்குண்டால் புழுக்கள் கூட தரைவிட்டுத்துள்ளும்*
*கழுகு தூக்கிடும் குஞ்சுக்காகத் துடித்தெழும் கோழி*
*சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போதும் முயல்கூட எதிர்த்துநிற்கும்*
*சாக்கடைக் கொசுக்களாநாம்; சரித்திரச் சக்கரங்கள்*
*சரித்திரம் சுழலும் போதும்*
*சமுத்திரம் குமுறும்போதும்*
*பொறுத்தவன் பொங்கும் போதும்*
*புயல்காற்று சீறும்போதும்*
*பறித்தவன் ஆதிக்கத்தை*
*பசித்தவன் எதிர்க்கும்போதும்*
*மறித்தவன் வென்றதில்லை* *மறுப்பவன் புவியில் இல்லை*.
எனவர்க்க போராட்டத்திற்கு விளக்கம் அளித்தவர் தணிகைச் செல்வன்.
70களில் இவரது கவிதையை உச்சரிக்காத இடதுசாரி இளைஞர்களே இல்லை எனலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டு வெளியேறிய பின்னர் அவரது பெயர் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டது. அன்னாரது மறைவு இடதுசாரி போராட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு பேரிழப்பாகும்.
No comments:
Post a Comment