சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 15 December 2024

சண்டி குதிரை சதிராட்டம் தகுதியில்லா தலைமைகள்.

 

ஆனை தாரேன்

 அம்பாரி தாரேன்

அஞ்சு லட்சம் தரேன் 

அத்தனையும் தாரேன்...


 அளந்துவிட்டார் 

சதிராட்ட தலைவர்

 அசந்து போய்

 ஆமாம் போட்டனர் மக்கள்......


அளந்தது போதாது என்று

 இன்னமும் அளக்கலானார்.

ஆகாச நட்சத்திரங்கள் 

அத்தனையும் கோர்த்து தாரேன்.....


ஆழ்கடல் முத்துக்களையும்

 அள்ளித்தாரேனென்று.

அதிகமாய் நம்பி 

அரியனையில் ஏற்றினார் மக்கள்.....


ஏறி அமர்ந்ததும்

 ஏரோபிளேன் ஏறி 

ஊர் ஊராய் சுற்றினார் 

உலகம் எங்கும்..... 


அத்தனையும் தருவாரென்று

 ஆவலாய் மக்கள் இருக்க 

அருணா கயிறு தவிர 

அத்தனையும் உருவி சென்றார்...

அரசாங்க சொத்தனையும் 

தன் நண்பருக்கே

 அள்ளிக் கொடுத்தார்

 அளவில்லாமல்...... 


 உள்ளூர் போதாதென்று

 உலகமெல்லாம் சுருட்ட வழி செய்தார். 

எதிர் நின்ற மக்களோ

 ஏமாந்து போய் நின்றார்.....

1 comment:

  1. இன்றுதான் இந்தபக்கத்தை பார்க்க அனுமதி தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...