சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 11 December 2024

Witnes”

 


ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடு என்றால் குறைந்த பட்சம் தன் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் ,பாதுகாக்கப்பட்ட  குடிநீர் ,கழிவு நீர் அகற்றம் ,அடிப்படை கல்வி போன்றவற்றையாவது   வழங்கியிருக்க வேண்டும்.கழிவு பொருள் அகற்றம் என்பது கட்டாயம் uncompramised ஆக திட்டமிட்டு செய்தே தீர வேண்டிய விஷயம் .இதில் ஊழல் செய்வதோ,திட்டமிடாமலோ,அரைகுறை திட்டத்தோடோ செய்யக்கூடிய விஷயமல்ல.ஏனென்றால் பெரும் கொள்ளை நோய் தாக்கும் போது அதனால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பு மிக கடுமையானதாகவே   இருக்கும்.

சென்ற நூற்றாண்டு  வரைகாலரா ,பேதி மலேரியா,டைபாய்டு பிளேக் ,போன்ற நோய்களால் இறந்தவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும்.

எனவே கழிவு நீர் அகற்றம் என்பதன் முழு பொறுப்பும் அரசு மற்றும் அதன் சார்ந்த விஷயமாகும்

அதே போல மலக்குழி நீர் அடைப்பு சார்ந்த விஷயங்கள் சமூகம் சார்ந்த விஷயங்கள்.ஏனென்றால் பிளாஸ்டிக்,டயபிராம்நாப்கின் போன்ற கண்ட குப்பைகளை போடுவதால் தான் அடைப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அரசும் சமூகமும் செய்கின்ற பொறுப்பற்ற செயல்களால் வரும் அடைப்பை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது திணிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது. 

இது தான் “Witnes” விட்னெஸ் என்ற திரைப்படத்தின் அடிப்படையான கேள்வி.

மலக்குழி மரணங்கள் ஏராளமாய் இன்று வரை நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் இன்று நம்மை பொறுத்தவரை ஒரு செய்தி அவ்வளவு தான்.

ஒரு விதவை துப்புரவு தொழிலாளியின் மகன் தாய் கந்து வட்டிக்காரனால் பட்ட அவமானம் தீர்க்க மலக்குழியில் இறங்கி மூச்சு திணறி இறந்து போகிறான் . அதற்கு நியாயம் கேட்டு அந்த தாயும் ,தொழிற்சங்கமும் போராடுவது தான் அடிப்படை கதை சுருக்கம் .

 

 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...