சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 11 December 2024

நல்ல நாடகம்

 ஒரு முறை கே பாலச்சந்தர் அவர்கள் ஒரு சோக நாடகத்தை இயக்கி, தானே  டாக்டர் வேஷத்தை ஏற்று நடித்துள்ளார். 

 அந்த நாடகத்தின் முதல் காட்சியில், ஒரு குடும்பத் தலைவன் இறந்து விட்டதாக அவர் ஸ்டெத்தினை வைத்து பார்த்து அறிவிக்க வேண்டும். அதன் பிறகு கதை தொடரும். அந்த குடும்பத் தலைவன் இறந்து விட்டால், குடும்பம் படக்கூடிய கஷ்டங்களை விளக்கக்கூடிய ஒரு சோக நாடகம் அது. 

கே பாலச்சந்தர் அவர்கள் காதில் ஸ்டெத்தை காதில் வைக்காமலேயே பார்த்து நோயாளி இறந்து விட்டதாக அறிவித்தவுடன் நாடகத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் சிரித்து கைதட்டி விட்டனர்.  

இவர் ஒன்றுமே புரியவில்லை உள்ளே நுழைந்தவுடன் அவருடைய நண்பர் ப்ராம்டர்  அணந்துவிடம் ஏண்டா ஜனங்கள் சிரித்தார்கள் என்று கேட்டார். 

அனந்து சிரிக்காமலே சொன்னார். 

உலகத்திலேயே ஸ்டெத்தை காதில் வைக்காமலே பார்த்து நோயாளி இறந்து விட்டதாக அறிவித்த முதல் டாக்டர் நீதாண்டா என்று. 

அதன் பிறகு எல்லா நடிகர்களும் உயிரை கொடுத்து நடித்தாலும் நாடகம் சொதப்பிவிட்டது. சோக நாடகம் சிரிப்பு நாடகமாகிவிட்டது. என்னதான் சிறந்த கதை வசனம் நல்ல நடிகர்கள் இருந்தாலும் முதல் காட்சியில் சொதப்பிவிட்டால் நாடகம் அவ்வளவு தான்... 


இப்பொழுது இரண்டாவது டாக்டர் வந்துவிட்டார். அவர்தான் அன்புமணி....

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...