சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 28 January 2012

வாக்காளர் தினம்....

வாக்காளர் தினம்......
தொலைந்து போன காதலை நினைவூட்ட
 காதலர் தினம்.
மதிக்காமல் விட்டு விட்ட ஆசிரியரை மதிக்கும் 
ஆசிரியர் தினம்...
வீதியில்   தவிக்கவிட்ட அன்னையை கொண்டாடும் 
அன்னையர் தினம்.....  
தொலைந்து போன வாக்குரிமையை தேடும் 
வாக்காளர் தினம்......
.திருவிழாக்கள் வரும்போது தான் 
ஊரே களை கட்டும்.
தேர்தல் வரும்போது தான் 
நாடே களை கட்டும்.
தெய்வங்கள் வீதிக்கு வந்ததால் 
பூசாரிகள் வீடுகளுக்குள் நுழைகிறார்கள் .
மொய் கொடுத்து விருந்து வைக்கும் 
புத்தம்புது பார்முலாக்கள்.....
நடக்க முடியாத ஊர்களுக்கெல்லாம் 
புத்தம்புது பேருந்துகள்.
கேட்பதெல்லாம் கிடைக்கும் 
தேர்தல் முடிந்ததும் அனைத்தும் 
காணாமல் போகும் அதிசியங்கள்...
வாக்காளரை இருப்பதற்கு 
பெருமை கொள்வோம்..........

2 comments:

  1. "வாக்காளராய்" என்றிருக்க வேண்டுமோ....ஆமாம் என்ன ஆதங்கம்...?

    ReplyDelete
  2. மனிதர்களை மனிதனாக நேசிக்கும் தினமும் வர வேண்டும், மதத்தை அல்ல மனித மனத்தை நேசிக்கும் தினம் வர வேண்டும் இப்படிபட்டவைகள் நடந்தால் எதுவும் மாயமாய் மறையும் அதிசியங்கள் நடக்காது

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...