நண்பரிடம் வருடத்தின் கடைசி நாளில் புத்தாண்டு வாழ்த்து கூறினேன்.
"எதற்கு"? என்றார்.
''அய்யா !முடிகிறதே ...புது வருடம் பிறக்கிறதே ..அதற்குத்தான்"என்றேன் .
"போன வருடம் முடிந்தால் என்ன ....
புது வருடம் பிறந்தால் என்ன ?
ஏதாவது மாறப்போகிறதா ..அல்லது நீரோ நானோ மாறப்போகிறோமா என்ன?"என்றார்.
ஏதடா வில்லங்கமாய் போச்சு என்று எண்ணிக்கொண்டு தொடர்ந்தேன்.
"இல்லை சார் ..ஒரு நம்பிக்கை தான்..."என்று இழுத்தேன்
."நீரே நினைத்துப்பாரும்" என்றார்.
நேற்று இந்த உலகம் எப்படி இருந்ததோ
அப்படியே இன்றும் இருக்கிறது.
இன்று எப்படி இருக்கிறதோ
நாளையும் அப்படியே இருக்கப்போகிறது ...
நேற்று போல் இன்றும்
இன்று போல் நாளையும் என்றால்
நாளை என்பது எதற்காக "என்றார்.
தலை சுற்றியது .
.ஒரு நாட்குறிப்பை கொடுத்து தொடர்ந்து எழுதி வா "என்றார்.
வீட்டிற்கு சென்று பெருமையாய் எழுதினேன்...
"ஒரு வரி கூட எழுதப்படாமல்
ஒரு நாள் கூட கழியவில்லை"என்று.
யதேச்சையாய் சென்ற ஆண்டு நாட்குறிப்பை புரட்டிப் பார்த்தேன்.
அதிலும் கூட அந்த ஒரு வரி மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
Welcome to Blog world...Good luck.
ReplyDeleteநாளெல்லாம் நல்ல நாளே என்பார்கள். நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு என்பார்கள். நேற்று போல் இன்றில்லை இன்று போல நாளை இருக்காது என்பார்கள். நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பது கடவுளின் கோடை (Present is the present given by God) என்பார்கள். இன்று வாழ்வோம்!
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.......
ReplyDeleteநாளெல்லாம் நல்ல நாள் தான்.
ஆனால் நாம் தான் பயன்படுத்துகிறோமா என்ன ....