சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 10 January 2012

நக்கீரனின் கருத்து சுதந்திரம் ?



நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் மறுக்கிறேன் 
ஆனால் அதை சொல்லும் உரிமை உனக்கு இருக்க வேண்டும் என்பதற்காக என் உயிரையும் கொடுத்து போராடுவேன் என்றான் பிரெஞ்சு எழுத்தாளர் ரூசோ.தனி மனித கருத்து சுதந்திரத்திற்க்காக போராடியவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கருத்து சுதந்திரத்திற்கு அழகான வரையறை வழங்கினர் ஆங்கிலேயர்.
கைத்தடி வீசி நடக்க உனக்கு உரிமை உண்டு .... 
அது அடுத்தவன் மூக்கை பதம் பார்க்காத வரை....
நம்மவர்கள் பலரும் கருத்து சுதந்திரத்தை தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழக முதல்வரது செயல்பாடுகளில் பல முரண்பாடான முடிவுகள் உண்டு..... சமசீர் கல்வி .தலைமை செயலக மாற்றம், அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம் என்று....
சிலர் அவரது முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம்..
சிலர் மறுதலிக்கலாம்.அம்மாதிரி பல விசயங்களில் நக்கீரன் முதல்வரது கருத்துக்களை விமர்சித்தது உண்டு .....அதற்காக யாரும் கல்லை கையில் எடுத்துக்கொண்டு வரவில்லை.ஆனால் அவரது தனிப்பட்ட விசயங்களை விமர்சிக்கும்போது மாட்டுக்கறி தின்னும் பிராமணத்தி ...என்று எழுதுவது எந்த வகையில் நியாயம்.
கள்ளுண்ணாமை புலால் உண்ணாமை என தனிமனித ஒழுக்கத்திற்க்கென்று ஏராளமாய்  எழுதி சென்றுள்ளார் திருவள்ளுவர்.அதில் புலால் உண்ணாமையை விடாப்பிடியாக கடைப்பிடிக்கும் சில சமூகத்தில் பிராமண சமுதாயமும் ஒன்று ...
கறியில் ஆட்டுக்கறி என்ன ..கோழிக்கறி என்ன ....மாட்டுக்கறி என்ன..
இது அப்பட்டமான ஜாதி துவேசமில்லையா. வேறு ஒரு சமூகத்தை சார்ந்தவரை மாட்டுக்கறி தின்னும்.......என்று எழுதியிருந்தால் வன்கொடுமை என்றெல்லாம் பாய்ந்திருக்கும்.
எழுதுவதற்கு தமிழகத்தில் விசயங்களா இல்லை ....நியாயமான விசயங்களை நியாயமான முறையில் விமர்சனம் செய்வது தான் பத்திரிக்கையின் தார்மீக கடமை.அதை விட்டு விட்டு உண்மையை எழுதுகிறேன் என்ற பேரில் நடிகையின் சொந்த வாழ்க்கையை எழுதுவது அரசியல் வாதியை அசிங்கமாய் விமர்சிப்பது அதிகாரிகளை மிரட்டுவது என்பதெல்லாம் முறையற்ற செயல்.
அதற்காக சிலர் நேரடியாக சென்று கல்வீசி அந்த அலுவலகத்தை தாக்குவது கண்டிக்க தக்கது.பாதிக்கப்பட்டிருந்தால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பதே முறையானது.

1 comment:

  1. என்னமோ போங்க.....! எதுவுமே சரியில்லை...!!

    :))

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...