சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 8 January 2012

பள்ளிக்கூடம்

நேற்று மாலை சன் தொலைக்கட்சியில் மாலை தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் ஒளிபரப்பினார்கள்.எத்தனையோ உதவாத படங்கள் ஒளிபரப்பபட்டாலும் இடையிடையே கொஞ்சம் உருப்படியான படங்களையும் காட்டுவார்கள் போலிருக்கிறது .மீண்டும்  மீண்டும் ஒளிபரப்பானாலும்   சில நேரங்களில் சில படங்கள் பார்க்க தூண்டுகிறது.சின்ன கதை தான்.கிட்டத்தட்ட ஆட்டோ கிராப் மாதிரி நினைவூட்டும் கதை தான்.

கிராமத்து பள்ளிக்கூடத்து அனுபவங்கள்.வாழ்க்கை சுழற்சி .காதல் .முன்னேற்றம்.வளர்த்த பள்ளியை மேம்படுத்தல் ,நட்பு ,சுபம் என சுற்றி வருகிறது.
வாழ்க்கை ஓட்டத்தில் கலெக்டர் ,சினிமா டைரக்டர்,கிராமத்து விவசாயி,ஆசிரியை,கைதி .....என பல நிலைகளில் சிதறிப்போன மனிதர்களையும் ,பள்ளியை மேம்படுத்த நடைபெறும் முயற்சிகளும் சிறப்பாக காட்டப்பட்டிருந்தது.கலெக்டராக நரேன்,ஜமீந்தார் மகள்/ஆசிரியையாக சினேகா,டைரக்டராக சீமான்,கிராமத்தானாக தங்கர் பச்சான் என பலரும் கலக்கியிருக்கிறார்கள்.
மாவட்ட கல்வி அதிகாரியாக வரும் வி.சேகர் ,ஒவ்வொருவரும் தாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்த முயற்சி செய்தால் தமிழகமே முன்னேறிவிடும் என நன்றாய் பதிவு செய்திருக்கிறார்.
அது சரி...கடைசியாய் தங்கர் பச்சான் ஆசிரியர் அவரை திட்டியிருப்பதை காட்டி முடித்திருக்கிறாரே?அது ஏன் என புரியவில்லை.என்ன சொல்ல வருகிறார் என எனக்கு புரியவில்லை....தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.
எனக்கு என்னமோ நாங்கள் படித்த காலத்தில் எங்களை ஊக்குவித்த எங்கள் ஆசிரியர் திரு பொன் பாண்டியன் அவர்கள் மட்டுமே ஞாபகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.

பழைய படம் தான் என்றாலும் விமர்சிக்கலாம் என நினைக்கிறேன்.

3 comments:

  1. சொல்ல வார்த்தைகளில்லை! ஏனென்றால்.......................................நான் அந்தப் படமே பார்க்கவில்லையே....!!

    ReplyDelete
  2. எப்படி ஸ்ரீ ....உங்களால் மட்டும் முடிகிறது ?

    ReplyDelete
  3. எப்படி ஸ்ரீ ....உங்களால் மட்டும் முடிகிறது ?

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...