சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 5 January 2012

புத்தாண்டு


புத்தாண்டை சிறப்பை கொண்டாடலாம் என்று நண்பரிடத்தில் பேசினேன்.
அவர் ஆங்கில புத்தாண்டை நாம் எதற்கு கொண்டாட வேண்டும் என்றார்.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ உலகம் முழுக்க நடைமுறையில் அன்றாட வாழ்க்கையிலிருந்து அரசாங்கங்களது செயல் பாடுவரை எல்லாமே ஆங்கில வருடத்தை ஒட்டித்தான் சரி என்று கொண்டாட முடிவு செய்தோம்.ழக்கம் போல அலுவலகம்...நண்பர்கள் என்று உள்ள வட்டத்தை விட்டு விலகி கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தோம்.
அருகில் உள்ள குமரமலைக்கு செல்லலாம் என்றவுடன் கோவிலுக்கு பாத  யாத்திரையாக செல்ல முடிவு செய்தோம்.
புதுகை பேருந்து நிலையம் எதிரே 


புத்தாண்டு அன்று காலையில் புதிய பேருந்து நிலையத்தை அடையும்போது டெல்லியில் இருப்பதைப்போன்று ஒரு பிரமை.அப்படி ஒரு வித்தியாசமான பனிமூட்டம். பொது அலுவலக வளாக கட்டிடங்களையும் ,அரண்மனையையும்(இன்றைய மாவட்ட ஆட்சியரகம்) பனிமூட்டத்தின் பின்னணியில் பார்க்கும்போது டெல்லியை பார்த்த மாதிரியே இருந்தது.(அப்படியாவது சந்தோசப்பட்டுக்கொள்வோமே) 
மாவட்ட ஆட்சியரகம் 

திடீரென்று பாதயாத்திரை கிளம்பியபின் தான் தெரிந்தது.அது எவ்வளவு கடினம் என்று...அய்யப்ப பக்தர்களது கோசம் எவ்வளவு உண்மை என்று.....கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ....
சாலை என்பது பெயரலவிற்க்குத்தான்கால்வைக்க முடியாத அளவிற்கு குண்டும் குழியும் ஊசிமுனை கற்கள் மீது நடப்பது கடினமாகவே இருந்தது..
எனினும் கோவிலுக்கு செல்லும் உற்சாகம்  சிரமத்தை பெருமளவிற்கு குறைத்தது.
படிபூஜை 
செல்லும் வழியில் களைப்பு தெரியாமல் உற்சாகமாக பக்தர்கள் செல்ல நண்பர்கள் சிலர் தேநீர் பிஸ்கட் கொடுத்து புத்தாண்டு வாழ்த்து கூறி உபசரித்தனர்.யாரென்று பார்க்கையில் புதுகை மீனாட்சி பதிப்பக நண்பர் தனது குடும்பத்தாருடன் இந்த பணியை செய்துகொண்டிருந்தார்.இன்னொரு இடத்தில் எங்களுக்கு பெயர் தெரியாத நண்பர் ஒருத்தரும் இந்த பணியை செய்து கொண்டிருந்தார்.ஒருவழியாக குமரமலை அடைந்ததும் மனம் ஆனந்த மயமானது.ஓரளவிற்கு கூட்டம் இருந்தது



படிபூஜை 


.குமரமலையின் அத்தனை படிகளிலும் தேங்காய், பழம்  ,பத்தி ,வெற்றிலை கற்பூரத்துடன் படிபூஜை பிரமாதமாய் நடந்தது.எனக்கு தெரிந்த வருவாய்த்துறை நண்பர்கள் இந்த திருப்பணியை சிறப்பாய் செய்து கொண்டிருந்தனர்.ஓதுவார் ஓத ,திருவாளர் இராமையா குருக்களது திருமகனார் படி பூஜையை சிறப்பாய் டத்திக்கொண்டிருந்தார்

திருவீதி உலா
.படி பூஜை முடிந்ததும் குமார மலையானுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.உற்சவ மூர்த்தியின் திருவீதி உலாவும், மலையில் கோவிலின் பிரகாரத்தில் உற்சாகமாய் நடைபெற்றது.சிறப்பான அன்னதானமும் நடைபெற்றது.கலந்து கொண்டு திரும்புகையில் வழக்கமான முறையை விட்டு ஆலய தரிசனத்துடன் கொண்டாடியது உற்சாகமாய் இருந்தது.

7 comments:

  1. எங்க சொந்த ஊரும் புதுக்கோட்டைதான். அப்பா அங்கேதான் பிறந்து வளர்ந்தார். நான் பிறந்து வளர்ந்தது கும்பகோணம்.

    குமரமலை முருகன் எங்க குலதெய்வம். ரெண்டு மூணு வாட்டி வந்திருக்கேன். கூடிய சீக்கிரம் மறுபடியும் வரணும்.

    ReplyDelete
  2. புத்தாண்டைப் பயனுள்ள முறையில் கொண்டாடியிருக்கிறீர்கள்.அருமையான படங்கள் பகிர்வுடன்!

    கோபி...கும்பகோணம், பெங்களூர்....புதுகையுமா உங்கள் ஊர்? யாதும் ஊரே யாவரும் கேளிர்!

    ReplyDelete
  3. ஜனவரி ஒன்று அன்று நான் சென்றது சென்னை குரோம்பேட்டையில் உள்ள குமரன் குன்றம். நீங்கள் சென்றது புதுக்கோட்டையில் உள்ள குமரமலை! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Sir,
    your blog settings to be corrected for the time zone and for removal of 'word verification' for submitting comments. This is for getting more responses from readers, easily.

    ReplyDelete
  5. நன்றி கோபி அவர்களே. குமரமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
    ஸ்ரீ ...இதுவரை பொழுதை பயனில்லாமல் கழித்திருக்கிறேன் என்பதை நினைவு படுத்தியதற்கு நன்றி.இனிமேலாவது உருப்படியாய் பயன்படுத்தலாம் தானே......
    கௌதமன் சாருக்கு நன்றி

    ReplyDelete
  6. வழக்கமாக புத்தாண்டுக்கு கோயிலுக்கு சென்று வருவதுண்டு ஆனால் இந்த வருடம் எங்கும் செல்லவில்லை. உங்கள் தளத்திற்கு வந்தேன் அருமையான படங்களுடன் போக வேண்டாம் என்று இருந்த என்னை நீங்கள் வழுக்கட்டாயமாக என்னை இழுத்து சென்றிர்கள் அன்றே பின்னுட்டம் இட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் சோம்பேறி தனத்தால் இயலவில்லை. மன்னிக்கவும் படங்களுடன் பதிவு நன்றாக இருந்தது அதனால்தான் உங்களை ப்லோ செய்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. மிக்க நன்றி.மதுரை நண்பரே ..மகிழ்ச்சி....நான் வலைதளத்திற்கு புதியவன்.ஆனாலும் கருத்துலகம் என்னை பிரமிக்க வைக்கிறது.மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.நன்றி.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...