ஆதி சங்கரர் பாரத தேசத்தின் மகா தத்துவ ஞானிகளில் ஒருவர்
. இன்றைய கேரளாவை சேர்ந்த காலடி என்ற ஊரில் அவதரித்த ஆதி சங்கரர்சீர்கெட்டு ,பிளவு பட்டிருந்த சனாதன மதத்தை தட்டியெழுப்பிய மேதை.
வேத உபநிஷத்துகளுக்கும்,பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதி அத்வைத வேதாந்தத்திற்கு உயிரூட்டியவர்.
பகவத் கீதைக்கும்,விஷ்ணு சஹாஸ்ரனாமத்திர்க்கும் உரை எழுதியவர்.
சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், விவேக சூடாமணி, உபதேச சாஹஸ்ரி,கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களைஇயற்றியவர்.
பாரத தேசமெங்கும் பவனி வந்து சிருங்கேரி, பூரி, துவாரகா, பத்ரிநாத் ஆகிய இடங்களில் அத்வைத மடங்களை உருவாக்கி ஹிந்து மதத்திற்கு புத்துனர்சியூட்டியவர்.
தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.
இன்று 26.04.2012 ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.
No comments:
Post a Comment