சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 8 November 2024

எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி .

 


எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி  என்று கேட்டால்,  எந்த கொள்ளியை நல்ல கொள்ளி என்போம். அதுபோலத்தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வந்தால் நல்லது என்று கேட்டால் யாரை சொல்வோம்.

நம் நாட்டில் உள்ள சில மேதாவிகள் ஐயையோ கமலா ஹாரிஸ் தோற்றுவிட்டாரே என்று பதறுகிறார்கள். டிரம்ப் வந்ததனால் இந்தியாவிற்கு ஆபத்து என்று பதறுகிறார்கள். இரண்டு பேரில் யார் வந்தாலும் ஒன்றுதான் இருவரின் கொள்கையும் ஒன்றுதான்.

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி பெண்.  ஒரு பெண் அதுவும் இந்திய வம்சாவளி பெண் வந்தால் நமக்கு பெருமை என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

ஒபாமா வந்தால் ஆப்பிரிக்க கருப்பினத்தை சார்ந்த ஒருவர் வந்துவிட்டால்,  கருப்பினத்தவருக்கும், ஆப்பிரிக்க குடிமக்களுக்கும், நல்லது நடக்கும் என்று நம்பி இருந்தார்கள் ஆனால்  அமெரிக்காவில் எந்த கருப்பினத்தவரோ அல்லது உழைக்கும் மக்களோ ஆப்பிரிக்க கருப்பினத்தவரோ முன்னேறியதாக எந்த நிகழ்வும் இல்லை. மாறாக பிற நாடுகளின் மீது அமெரிக்க யுத்த குறுக்கீடு அதிகபட்சம் நிகழ்ந்தது அவருடைய காலத்தில் தான்.

ஏனென்றால் அமெரிக்க தேர்தல்களை தீர்மானிப்பது அமெரிக்க ஆயுத வியாபாரிகள், நிதி நிறுவனங்களும் தான். அவைகளும் பெரும்பாலாக யூத முதலாளிகளின் கையில் தான் உள்ளன.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள இயற்கை வளங்களை சூறையாடுவதற்காக தாங்கள் விரும்பும் அரசாங்கங்களை உருவாக்குவதில் இருந்து, தங்களுக்கு பிடிக்காத அரசாங்கங்கள் வந்தால் அவற்றை கவிழ்ப்பதற்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாக்குவதும் சுரண்டுவது மட்டுமே அமெரிக்காவின் கொள்கைகளாக இருக்கின்றன.

அதற்காக நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டிகளை உருவாக்குவதும், மோதல்களை ஊக்குவிப்பதும்,  யுத்தங்களை நிகழ்த்துவதுமே அமெரிக்காவின் கொள்கையாகும்.

இதற்காக எந்தவிதமான சாகச வேலைகளை செய்வதும் ஐக்கிய நாடுகள் சபையை தனது எடுபிடியாக வைத்துக்கொண்டு உலக நாடுகளின் மீது  மேலாதிக்கத்தை  செலுத்துவதுமே அமெரிக்க பெரு முதலாளிகளின் கொள்கையாகும்.

இதற்காக பல நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் நெடுங்கால கடன்களை கொடுத்து அந்த நாட்டின் செல்வத்தையும் சுயாதிபத்தியத்தையும் சூறையாடும் வேலையைத்தான் அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது.

இதற்காக எந்த நாட்டிலும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிற வேலைகளை பலமுறை அமெரிக்கா செய்திருக்கிறது. இந்த வேலையை செய்வதற்கான சிறந்த வேலைக்காரர் யார் என்று போட்டி தான் எப்பொழுதுமே அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலாகும். அதில்  நிரந்தரமாக இருமுனைப் போட்டியாக தான் அமெரிக்க பெரு முதலாளிகள் வைத்திருப்பார்கள்.

இந்தப் போட்டியில் ட்ரம்ப் ஜெயித்தாலும், கமலா ஹாரிஸ் ஜெயித்தாலும் விளைவு ஒன்றுதான்.

எப்படி இன்ஃபோசிஸ் நாராயணசாமி மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தில் ஜெயித்ததால் இந்திய மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லையோ அதுபோல, கமலஹாரிஸ் ஜெயித்திருந்தாலும் இந்திய மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. நாம் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 நம் வாழ்க்கைத் தரம் முன்னேற நாம்தான் போராடியாக வேண்டும்

2 comments:

  1. சிறப்பு. யுதமுதலாளிகள் தான் உலகின் பொருளாதாராத்தை தீர்மானிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. உண்மையை உரக்கச் சொன்னீர் உலகிற்கு

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...