தவளை
என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குனமுண்டு
தண்ணியில் வாழும் சில நேரம்
தரையில் வாழும் பலநேரம்
மனிதரிலும் அப்படியோர் இனமுண்டு
மத்திய
தர வர்க்கமென்று பேருண்டு
மேல்தட்டு கீழ்த்தட்டு இரண்டுமில்லாமல்
இரண்டுங்கெட்டான் இனமாதலால்
இப்படியோர் பேருண்டு...
நினைப்பதெல்லாம் உச்சத்தில்
வாழும் பல நேரம் அச்சத்தில்
வாழும் பல நேரம் அச்சத்தில்
ஆசைப்படுவது ஆகாயத்திற்க்கு
அல்லல்படுவதோ பாதாளத்தில்
வாங்கும் பொருளோ மிக சிறிது
விசாரணை செய்வது ஊரெங்கும்
வங்கி கணக்கில் கொஞ்ச பணம்
க்ரெடிட் கார்டில் அதிக கடன்......
விசாரணை செய்வது ஊரெங்கும்
வங்கி கணக்கில் கொஞ்ச பணம்
க்ரெடிட் கார்டில் அதிக கடன்......
இவரிடம் இல்லாத பொருளில்லை
இருப்பதில் பாதி கடனில்....
தெரியாத விசயமில்லை இவருக்கு
தெரிந்ததெல்லாம் நுனிப்புல் கதைதான்....
No comments:
Post a Comment