சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 27 December 2014

ஆண்டி மடம்

ஊரெல்லாம்
சுற்றியலைந்து
அலுத்து சோர்ந்த
ஆண்டிகள் கூடினர்..  

அவரவர் அனுபவத்தில்
அவர்களுக்கென்று
அழகாய் மடம் கட்ட
அற்புதமாய் திட்டமீட்டினர்...

வரவேற்க திண்ணையொன்று
ஓய்வெடுக்க
முற்றமொன்று
ஆண்டவனை வணங்க 

அழகாய் அறை ஒன்று
உபசரமாய் உணவாக்க
உக்கிரான அறையொன்று
உணவருந்த முற்றமொன்று...

பின்ட்டில்
நீராட கிணறு ஒன்று
தோட்டமும்
நந்தவனமும் அங்குண்டு

வாய்
பல பலவாய்
திட்டமீட்டினர்
அவரவர் சிந்தனைக்காய்...

நிதி திரட்டிட
நியாயமாய்
பொறுப்பேற்றனர்
அனைவருமே...
..........................................
........................................
அதிகாலை
விழித்தெழுந்ததும்
அனைவரும்
பறந்தனர்
ஆளுக்கோர் திசையாய்  ......................................................
...........................................

ஊரெல்லாம்
சுற்றியலைந்து
அலுத்து சோர்ந்த
ஆண்டிகள் கூடினர்.. 


1 comment:

  1. தங்கள் வரிகளை சுவைக்க ஆவலாய் உள்ளேன்

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...