சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 3 January 2013

வழி தவறிய வெள்ளாடுகள்

புத்தாண்டு முடித்த கையோடு வீட்டுக்கு இரண்டு புதிய நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.வேண்டுமென்று வரவில்லை.பாதை தெரியாமல் வந்து சேர்ந்தார்கள்.வீதி நாய்கள் துரத்தியதால் தாயை விட்டு பிரிந்த வெள்ளாட்டு குட்டிகள் தாம் அவை ..
வாசலில் வந்து நின்ற அவர்களை பார்த்த என் பத்தினியார் வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
(அவர்களுக்கும் முகவரி சொல்ல தெரியவில்லை?!)
முதலில் உரிமையாளர்கள் யாரென்று விசாரித்து பார்த்தால்யாருக்கும் தெரியவில்லை.
 பசி களைப்பு வேறு...தாயை பிரிந்த சோகம் ...பரிதாபமாய் கத்தி தீர்த்து விட்டார்கள்... என்ன கொடுப்பதென்று தெரியவில்லை.பிறந்து இரண்டு நாள் தானிருக்கும் 
தண்ணீரை நக்கி பார்த்தன..இலைகளை மோந்து பார்த்தன....ஒன்றும் நடக்கவில்லை.உடனே கடைக்கு சென்று பாட்டிலும்,பீடிங் ரப்பரும் வாங்கி வரசொன்ன என் மனைவி பாட்டிலில் பாலடைத்து ஆட்டுக்கு ஊட்டி விட்டாள் 



.நானும் கையில் வைத்து தடவி கொடுத்ததும் சற்றே ஆறுதலடைந்தன.எனினும் சொந்தக்காரர் வரவில்லை என்றால் என்ன செய்வது என்ற கவலை வேறு....

குட்டியை பிரிந்த ஆட்டின் நிலை பொறுக்காத ஆட்டுக்குட்டிகளின் சொந்தக்காரர் ஒரு வழியாக தேடி கண்டு பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.அவரிடம் ஆட்டு குட்டிகளை ஒப்படைத்ததும் கவலை தீர்ந்தது என்றாலும் குட்டிகளை பிரிகையில் சற்று கவலையாக தானிருந்தது......

4 comments:

  1. சில... நேரங்களில்.......

    ..சிலரின்... வழிமாற்றங்களும்...

    ஒர்... அழகிய.. சுவடாகின்றது!!

    -சுவடு!!

    ReplyDelete
    Replies
    1. வழி மாறுதல் சரி......
      வழி தவறுதல் துயரமல்லவா?
      நன்றி......

      Delete

  2. கையேடு.... கையோடு!

    குட்டிகளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருக்கின்றது நல்ல காரியம் செய்தீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது சரி ...
      குட்டிகளை பிரியும்போது
      எங்களுக்கு கஷ்டமாய் தானிருந்தது.....

      Delete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...