சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 9 May 2012

பஜ கோவிந்தம்-II

பஜ கோவிந்தம்பஜகோவிந்தம்
பஜகோவிந்தம்மூடமதே!
സம்ப்ராப்தேസந்நிஹிதேகாலே
நஹி நஹி ரக்ஷதி டூக்ரிஞ்ச்கரனே!!

கோவிந்தனை வழிபடு கோவிந்தனை வழிபடு
ஏ மூடனேகோவிந்தனை வழிபடு 
விதித்த காலம்(மரணம்) வரும்போது
இலக்கண விதிகள் உன்னை ஒருக்காலும்
காப்பாற்றவே முடியாது.......
கோவிந்தனை வழிபடு 

தேடு ஈஸ்வரனை.....
கடவுளை ,உள்ளே இருப்பவனை தேடுவதே இதன் நோக்கம்.
பூரணத்தை தேடுதல் என்பதே இதன் நோக்கம்,
அவிவேகியை விவேகி ஆக்குவதே இதன் நோக்கம்.
இச்சுலோகத்திர்க்கு கண்ணதாசன் அவருடைய 
அழகான நடையில் இவ்வாறு பாடுகிறார். 
"பாடிடுக பாடிடுக 
பரந்தாமன் மெய்ப்புகழை
பாடிடுக மூடமதியே
பாடுவதில் தீர்ந்து விடும் 
பழி பாவமத்தனையும்
பரந்தாமன் சொன்ன விதியே...

பாடுவதை விட்டு விட்டு
பாணினி இலக்கணத்தை
பற்றுவதில் நன்மை வருமோ?
பாய் விரித்த வேலை தன்னில்
காலனவன் சந்நிதியில்
பாணினியம் காவல் வருமோ?

பாடிடுக பாடிடுக 
பரந்தாமன் மெய்ப்புகழை
பாடிடுக மூடமதியே
பாடுவதில் தீர்ந்து விடும் 
பழி பாவமத்தனையும்
பரந்தாமன் சொன்ன விதியே.."

இதையே பட்டினத்தார் இவ்வாறு கூறுகிறார்.....
"நிலை விட்டு உயிர் நீங்கி அகலுமுன்னே
சிலை தொட்ட வேடன் எச்சில் தின்றவனை சேராமல்
வலைப்பட்டு உழலுகின்ற மானைப்போல் பரிதவித்துத்
தலை கேட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே?"

ஆதி சங்கரர் நம்மிடம் உள்ள லௌகிக அறிவில் 
உள்ள குழப்பத்தை நீக்க முயற்சி செய்கிறார்.....
அறிவு(வித்யா) இரு வகைப்படும்.
அவையாவன
*அபரா வித்யா "
லௌகிக விஷயங்கள்,உலகியல் சார்ந்த விஷயங்கள்
(உ.ம்) material sciences like physics,chemistrey,medicines,etc.......including சிக்ஷா,கல்பம்,வியாகரணம்,வ்ருத்தம்,சண்டக,ஜ்யோதிடம்....
*பரா வித்யா"
ஆத்மா ,மோக்ஷம் பற்றிய அறிவு
பிரம்ம வித்யா...வேதாந்தம்,வேதன்களைப்பற்றிய அறிவு.
அபரா வித்யாவை கற்றுக்கொண்டால் மட்டுமே
பரா வித்யாவை கற்றுக்கொள்ள முடியும்.
*அபரா வித்யா "-சாதகம்,குருவிடம் கற்றுக்கொள்ளும் மொழி மூலமாக 
*பரா வித்யா" சாத்தியமாகும்.
நிறைய கற்றறிந்த அறிவாளி,விஞ்ஞானி கூட 
பரா வித்யா கற்றுக்கொள்ள வில்லையெனில்
அபரா வித்யா முழுமை அடைந்து விட்டான் என கூற முடியாது.
அபரா வித்யா ஒருவழி மட்டுமே...
அபரா விதையையே மக்கள் முழுமை என எடுத்துக்கொள்கிறார்கள்.
இது தவறு.
அபரா வித்யா,பரா வித்யா பற்றிய குழப்பத்தில் 
உள்ளவனை மூடன் என கூற வேண்டும்
எனவே தான் மூட மதே என்கிறார் சங்கரர்.
பரா வித்யா முழுமை அடைந்த பின்னரே 
அபரா வித்யா முழுமை அடைந்ததாக கூற வேண்டும்.
உதாரணமாக சமைக்கும் காரியம் எப்போது முழுமை அடையும்?
உண்ட பின்னரே....
செய்த உணவை சாப்பிடவில்லைஎன்றால் 
சமைத்த உணவால் என்ன பயனிருக்க முடியும்?
எனவே சாதன சாத்தியத்தில் உள்ள குழப்பத்தையே 
"மோகம்" என சங்கரர் இடித்துரைக்கிறார்.  

காலம் கடந்தபின்கடவுளை 
வழிபடுவதில் என்ன பயன்?
காலம் முடியும்போது
காலன் அழைக்கும்போது
கற்றது கைகொடுக்காது
கடவுளே கை கொடுப்பான்.

1 comment:

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...