ஓநாய்:
நான் குடிக்கும் நல்ல நீரை
ஆட்டுக்குட்டியே ......
நீ ஏன் நான்கு காலால்
கலக்குகிறாய் ஆட்டுக்குட்டியே?
ஆட்டுக்குட்டி:
நீர் குடித்த மிச்சமன்றோ
ஓநாய் அய்யாவே........
ஒதுங்கி நின்று குடிக்கின்றேன்
ஓநாய் அய்யாவே........
ஓநாய்:
போன வருடத்திலே
ஆட்டுக்குட்டியே ......
போக்கிரித்தனமாய்
பேசினாய் ஆட்டுக்குட்டியே .?.....
ஆட்டுக்குட்டி:
போன வருடத்திலே
ஓநாய் அய்யாவே.......
நானிந்த பூமியிலே
பிறக்கவில்லைஓநாய் அய்யாவே.......
ஓநாய்:
உன் தாயே வைதிருக்கும்
ஆட்டுக்குட்டியே ...
அதற்க்குஉன்னைத்தானே
கொன்றிடுவேன்ஆட்டுக்குட்டியே ...
**************
சின்ன வயதில் என் தந்தையார் சொல்லிக்கொடுத்த
நீதிப்பாட்டு.ஓநாய் குணமுடையவர்கள்தங்களுக்கு
தேவை என்றால் எப்படிப்பட்ட நீதியையும் படைப்பார்கள்.
இந்த பாட்டையும் உலக நடப்பையும் நீங்கள் ஒப்பிட்டு
பார்த்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல........
எப்படி இந்தப் பாட்டையெல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்....சம காலத்தில் எதனோடு இதை ஒப்பிடலாம் என்று எனக்கு விளங்கவில்லை!
ReplyDelete