சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 4 February 2012

அனாமிகா.



இளமைக்காலத்தில் 
எவ்வளவோ அறிந்து கொள்ள முயற்சித்தேன் ..
சிலவற்றை கற்க முனைந்தேன்...
நிறைய நான் கற்றதாக 
பிறர் நினைத்தார்கள்.......
எனக்கு தெரிந்ததை 
பிறர்க்குரைத்தேன்
எல்லாம் தெரிந்ததாக எண்ணிக்கொண்டு .......
எல்லோரும் புகழ்ந்தார்கள்
என்னை
எல்லாம் தெரிந்தவனென்று......
வாழ்க்கை சூழலில் 
அடிபட்டு ஒதுங்கியதும் 
பளீரென்று  எனக்கே தெரிந்தது
எதுவுமே தெரியாதென்று.........
பூஜ்யமான பின் தான் 
புரிந்தது
எல்லாம் மாயைஎன்று......

1 comment:

  1. பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியமா...! இது எல்லோருக்குமே பொருந்தும் இல்லை?

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...