சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 19 April 2019

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில்


   திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில்                      புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில்    வட்டத்தில்  திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார   பாடல்  பெற்ற சிவன் கோயில் ஆகும்

 பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின்                      அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற                    திருப்பெருந்துறை என்கிற  ஆவுடையார்கோயில்                இன்றளவும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது   போலஅமைந்திருக்கும் திருக்கோயில்  ஆகும் ..
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே   எழுப்பப்பட்ட  திருக்கோயில்  ஆகும் புதிதாகக்    கோயில்கள்கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட              “ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக”                      என்று தங்களது  ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு    எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன்     வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது   தெளிவாகும்.
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள்                     கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில்   (கம்பிகளை   இணைத்துச் சேர்த்து அதிலே                                குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல)                 எல்லாமே கல்லில்செய்து அதன் மீது மெல்லிய ஓடு                     வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலையின்                                           ஒப்பற்ற சிறப்பை வெளிப்படுத்தும்.                                                                இதே மண்டபத்தில்  10-15 வளையங்கள் கொண்ட  
ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு                       உயரத்தில் பொறுத்தித் தொங்க   விடப்பட்டுள்ளது.
காண கண் கோடி தேவைப்படும் அளவிற்கு சிறப்புடைய                                                        இக்கலைக்கோயிலை காண வாருங்கள்......














































No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...