சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 16 November 2015

சென்னையில் வெள்ளம்



ஊரெங்கும் ஒரே மழை
குளங்கள்உடைந்தன
சாலைகள் மறைந்தன
ஊரெல்லாம் வெள்ளக்காடு
மக்கள் மடிந்தனர்....
முன்பு ஆண்டவர்கள்
ஆள்பவர்களை குறை கூறினர் ....
ஆள்பவர்கள்
ஆண்டவர்களை குறை கூறினர் ...
மக்கள்
ஆண்டவரை குறை கூறினர் .....
ஆண்டவர் கூறினார்
மண் கொடுத்தேன்
மழை கொடுத்தேன்
மரம் செடி கொடி கொடுத்தேன்
ஆறு குளம் கொடுத்தேன்
வாழ வழிவகை
அத்தனையும் கொடுத்தேன்.
தன்னலத்தால் அத்தனையும்
அழித்து விட்டு
என்னை ஏன் அழைக்கிறாய்.... 

சென்னையில் வெள்ளம் க்கான பட முடிவு

Monday, 27 July 2015

காலத்தை வென்ற கலாம்



கடலோர மண்ணில்
அக்னி சிறகுகளோடு பிறந்த
அற்புத மனிதன்....
கலாம் என்றால்
அறிவு என்பதை
நிரூபித்த கல்வியாளன்....
வின்னுலகிற்க்கும்
மன்னுலகிற்க்கும்
ஏவுகணைகளால்
பாலம் அமைத்த அறிவியலாளன்.....
அன்னை இந்தியாவின்
அணு சக்தியை காட்டி
அசர வைத்த அற்புத.புதல்வன்.....
கனவு காண்பது
கற்பனைக்கல்ல..
செயல்பட என உரைத்த ஆசிரியன்
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்ற  தமிழ் கூற்றை
உலகத்துக்கு
உரக்க கூறிய உத்தமன்...
மேகங்களின் அரசி
மேகாலயத்தில் விண்ணோடு
கலந்தாரே இறை மனிதன்.
மலர்ந்தது  15.10.1931
உதிர்ந்தது  27.7.2015

Tuesday, 13 January 2015

Middle class



தவளை என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குனமுண்டு
தண்ணியில் வாழும் சில நேரம்
தரையில் வாழும் பலநேரம்

மனிதரிலும் அப்படியோர் இனமுண்டு
மத்திய தர வர்க்கமென்று பேருண்டு
மேல்தட்டு கீழ்த்தட்டு இரண்டுமில்லாமல்
இரண்டுங்கெட்டான் இனமாதலால்
இப்படியோர் பேருண்டு...

நினைப்பதெல்லாம் உச்சத்தில்
வாழும் பல நேரம் அச்சத்தில்
ஆசைப்படுவது ஆகாயத்திற்க்கு
அல்லல்படுவதோ பாதாளத்தில்

வாங்கும் பொருளோ மிக சிறிது
விசாரணை செய்வது ஊரெங்கும்
வங்கி கணக்கில் கொஞ்ச பணம்
க்ரெடிட் கார்டில் அதிக கடன்......

இவரிடம் இல்லாத பொருளில்லை
இருப்பதில் பாதி கடனில்....
தெரியாத விசயமில்லை இவருக்கு
தெரிந்ததெல்லாம் நுனிப்புல் கதைதான்....

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...