சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 2 December 2012

கடன் வாங்கி.......



இப்படியாகத்தான் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதிதன் வேதாளத்தை......என்ற வரிகளைப் படிக்கும் போது விக்ரமாதித்தன் கதைகள் உன்மையா பொய்யா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுவது வழக்கம். ஆனால் ஒரு தனியார் வங்கி நன்பர் என்னிடம் பெர்சனல் லோன் வாங்க வலியுறுத்தி செய்த முயற்சிகளைப் பார்த்த போத அந்த கதை உண்மை என்று தான் தோனியது. அவரது ராபர்ட் புரூஸின் விடா முயற்சி எனது மன உறுதியை தளரச்செய்துவிட்டது.
சின்ன வயதில் எனது தந்தையாரின் போதனைகள் கடனே வாங்கக்கூடாது என்கிற எண்ணத்தை மனதில் ஆழமாக பதிந்திருந்தது.அவர் வழக்கமாக ஒரு பாடலைக்கூறுவார்...
வைரஅட்டியலுக்கு ஆசைப்பட்டு
வட்டிக்கு கடன் வாங்கி
அட்டியலை வாங்கி
வட்டி கட்ட முடியாம
அட்டியலை விற்று
வட்டிய கட்டி விட்டு
அட்டியலும் போய்
கடனும் அவமானமும்
தங்குனது தான் மிச்சம்......

என்னுடைய ஆசிரியர் மாப்போசானின்'' தி நெக்லஸ்'என்ற கதையை பாடமாக நடத்தும்போது  ஆடம்பரமாய் இருக்க ஆசைப்பட்டு தோழியிடம்  நெக்லஸ் கடனாய் பெற்று அது தொலைந்ததால் ஊரெல்லாம் கடன் வாங்கி பதலி நெக்லஸ் விலைக்கு வாங்கி திருப்பி கொடுத்து விட்டு வாழ்க்கையை சீரழித்த நடுத்தர வகுப்பினைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கதையை சுவாரஸ்யமாய் கூறுவார்.

சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் தேவை சார்ந்ததா.என்பது பற்றியும் கடன் வாங்குவது பற்றியும் நிறைய விவாதித்தது நன்றாய் இருந்தது..
ஆசைக்கும் தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்தாலே தேவையில்லாமல் கடன் வாங்கும் எண்ணம் வராது.

ஆனால் சென்னையில் பணியாற்றும் எனது மகனின் பர்ஸை பார்த்தால் நிறைய கிரெடிட் கார்டுகள்....கேட்டால் தத்துவமாய் பொழிகின்றான்.
அரசாங்கம் தான் வழிகாட்டுகிறது என தத்துவம் பேசுகிறான்.
ஒவ்வொரு இந்திய குடிமகனை கேட்காமலேயே ஒவவொருத்தன் பேரிலும் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறது தெரியுமா என கேள்வி வேறு.....

எனது நன்பர் ஒருவர் திரும்பிய பக்கம் எல்லாம் பெர்சனல் லோன்,கிரெடிட் கார்டு என கடன் வாங்கி குவித்தார்.எதிர்பாராத விதமாய் ஒரு விபத்தில் சிக்க பணம் கட்டமுடியாமல் மண்டை காய்ஞ்சு போனார்.

ஓவையார் அப்பவே பாடிவிட்டார்...
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதி கெட்டுப்போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் ஒல்லனாம் நாடு....

அது சரி.....
கடனாளியானால் கேவலப்படுவது தனி மனிதன் மட்டும் தானா...நாடு இல்லையா....

2 comments:

  1. கடைசிக் கேள்வி நல்ல கேள்வி. அதை அமெரிக்காவிடம்தான் கேட்க வேண்டும்! உங்கள் அப்பா சொன்ன பாடலும், அவ்வையார் பாடலும் ரசிக்கும்படி இருக்கின்றன.

    ReplyDelete
  2. நன்றி.ஸ்ரீராம்....
    அது சரி...
    இங்கு கேட்க வேண்டிய கேள்வியை அமெரிக்காவில் கேட்க சொல்கிறீர்களே நியாயமா?

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...