சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 31 December 2012

வருக வருக புத்தாண்டே!



வருக வருக புத்தாண்டே!
வந்து நலம் தந்திடுவாய் புத்தாண்டே!
சென்ற ஆண்டின் சுவடுகளின்
இனிமை தொடர்ந்திடவும்
கடந்த ஆண்டின்
கசப்புகள் மறந்திடவும்
எதிர்காலத்தில் புதுப்புது
நம்பிக்கை மலர்ந்திடவும்
வசந்தத்தின் வாசலாய்
வந்திடுவாய் புத்தாண்டே!


Tuesday, 25 December 2012

சுனாமி




உயிர்த்தெழுந்த 
நில அதிர்வு......
அதிர்ந்த பூமி
ஆயிரக்கனக்கில்
மனிதர்களின்
சவக்குழியானது........

சுழன்றடித்த சூறாவளி
வெகுண்டெழுந்த 
வெள்ளக்காட்டில்
அநேகர் அழிந்தனர் 
சிதைந்தது 
இயற்பு வாழ்க்கை......

உபரியான 
மனித கணக்கை 
சமன் செய்ததா
இயற்கை?
சுற்றுச்சூழலை 
சுத்தமாக்கியதா
சுனாமி?

(இன்று சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் 
26.12.2004)

Wednesday, 19 December 2012

விநோதம் பாரீர்....

எவ்வளவு பெரிய பூ....
                                                         எவ்வளவு அழகாய்.....
எவ்வளவு பெரிய முருங்கை காய்
                                                                   பச்சை பாம்பா........


Sunday, 2 December 2012

கடன் வாங்கி.......



இப்படியாகத்தான் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதிதன் வேதாளத்தை......என்ற வரிகளைப் படிக்கும் போது விக்ரமாதித்தன் கதைகள் உன்மையா பொய்யா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுவது வழக்கம். ஆனால் ஒரு தனியார் வங்கி நன்பர் என்னிடம் பெர்சனல் லோன் வாங்க வலியுறுத்தி செய்த முயற்சிகளைப் பார்த்த போத அந்த கதை உண்மை என்று தான் தோனியது. அவரது ராபர்ட் புரூஸின் விடா முயற்சி எனது மன உறுதியை தளரச்செய்துவிட்டது.
சின்ன வயதில் எனது தந்தையாரின் போதனைகள் கடனே வாங்கக்கூடாது என்கிற எண்ணத்தை மனதில் ஆழமாக பதிந்திருந்தது.அவர் வழக்கமாக ஒரு பாடலைக்கூறுவார்...
வைரஅட்டியலுக்கு ஆசைப்பட்டு
வட்டிக்கு கடன் வாங்கி
அட்டியலை வாங்கி
வட்டி கட்ட முடியாம
அட்டியலை விற்று
வட்டிய கட்டி விட்டு
அட்டியலும் போய்
கடனும் அவமானமும்
தங்குனது தான் மிச்சம்......

என்னுடைய ஆசிரியர் மாப்போசானின்'' தி நெக்லஸ்'என்ற கதையை பாடமாக நடத்தும்போது  ஆடம்பரமாய் இருக்க ஆசைப்பட்டு தோழியிடம்  நெக்லஸ் கடனாய் பெற்று அது தொலைந்ததால் ஊரெல்லாம் கடன் வாங்கி பதலி நெக்லஸ் விலைக்கு வாங்கி திருப்பி கொடுத்து விட்டு வாழ்க்கையை சீரழித்த நடுத்தர வகுப்பினைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கதையை சுவாரஸ்யமாய் கூறுவார்.

சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் தேவை சார்ந்ததா.என்பது பற்றியும் கடன் வாங்குவது பற்றியும் நிறைய விவாதித்தது நன்றாய் இருந்தது..
ஆசைக்கும் தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்தாலே தேவையில்லாமல் கடன் வாங்கும் எண்ணம் வராது.

ஆனால் சென்னையில் பணியாற்றும் எனது மகனின் பர்ஸை பார்த்தால் நிறைய கிரெடிட் கார்டுகள்....கேட்டால் தத்துவமாய் பொழிகின்றான்.
அரசாங்கம் தான் வழிகாட்டுகிறது என தத்துவம் பேசுகிறான்.
ஒவ்வொரு இந்திய குடிமகனை கேட்காமலேயே ஒவவொருத்தன் பேரிலும் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறது தெரியுமா என கேள்வி வேறு.....

எனது நன்பர் ஒருவர் திரும்பிய பக்கம் எல்லாம் பெர்சனல் லோன்,கிரெடிட் கார்டு என கடன் வாங்கி குவித்தார்.எதிர்பாராத விதமாய் ஒரு விபத்தில் சிக்க பணம் கட்டமுடியாமல் மண்டை காய்ஞ்சு போனார்.

ஓவையார் அப்பவே பாடிவிட்டார்...
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதி கெட்டுப்போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் ஒல்லனாம் நாடு....

அது சரி.....
கடனாளியானால் கேவலப்படுவது தனி மனிதன் மட்டும் தானா...நாடு இல்லையா....

Tuesday, 13 November 2012

தீபாவளி

                                                இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 
                                                                   புதுகை செல்வா 


Wednesday, 7 November 2012

மரம்

மரம் 
ஆதி மனிதனின்
 முதல் ஆலயம்..
ஆதி மனிதனிலிருந்து 
ஆயிரமாயிரம் பறவைகளின் 
சரணாலயம்...
குனிந்து நட்டவனையும் 
அண்ணாந்து பார்க்கவைக்கும் 
அதிசயம்.....
அள்ள அள்ள குறையாது 
அள்ளிக்கொடுக்கும் அற்புதம்....
அழித்தாலும் மனிதனை
மன்னித்து வாழவைக்கும் 
தாய்....
வழிபடவேண்டிய மரங்களை 
அழிக்காமல் பாதுகாப்போம்........
 \













Tuesday, 25 September 2012

அமைதி



அமைதி
எங்கும் அமைதி
என்ன தான் 
காற்றும்,மழையும் 
ஆட்டுவித்தாலும்,
எல்லாம் ஓய்ந்த பின்
எங்கும் 
அமைதி........


Sunday, 2 September 2012

குறும் படங்கள்


உலகம் பூரா வர்ற படங்களெல்லாம்
வெறும் என்டர்டைன்மேண்டுக்காகத்தான்
அப்படீன்னு போயிட்டுருக்கு...
ஆனா குறும் படங்கள் நல்ல படங்களை 
விரும்புவோருக்கு நல்ல தீனியாக அமைந்திருக்கின்றன
அந்த வரிசையில் இன்றைய திரைப்படங்களின் பாதையை
நன்றாய் கிண்டலடித்திருக்கிறார்கள்..
இந்த " ஓபன் பண்ணா"  படத்தின் மூலம்....
இந்த படத்தில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுவோம்....



Thursday, 30 August 2012

தர்மம் எங்கே?

தர்மம் எங்கே?
இன்று தற்செயலாக யு டியுபில் குறும்படங்களை தேடினேன்....
அற்புதமாய் "தர்மம்" என்று ஒரு படம் கிடைத்தது.
எத்தனையோ முழு நீள படங்களை பார்க்கிறோம்.
மூன்று மணி நேர படங்களை பார்க்கும் போது
 ஏற்படும் பாதிப்பை விட குறும்படங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. 
வெறும் ஏழே நிமிடத்தில் முடிந்து விடும் கதை....
பள்ளியில் மாறுவேட போட்டிக்காக பிள்ளையை 
பிச்சைக்கார வேடமிட செய்யும் நடுத்தர குடும்பத்தினர்...
நிஜ பிச்சைக்காரன்...
கௌரவ பிச்சைஎடுக்கும் காவலதிகாரி  ,
மனசாட்சியுள்ள புதிதாய் பணிக்கு சேரும் காவலர் 
என குறுகிய வட்டத்திற்குள் பெரும் நீதியைக்கூறும்
 அற்புத ஹைக்கூகவிதை...
மாஸ்டர் ஆஷிஷ்,சிவாஜி ராவ்,பாண்டியன்,
ராகவ்,பிரதீப்,காயத்ரி,துவாரகேஷ்
ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.. 
அபினவ் சுந்தர் நாயக் தொகுத்திருக்கிறார்.
ராஜா பட்டார்ஜி ஒலிப்பதிவினை அற்புதமாய் செய்திருக்கிறார்.
அஸ்வின் எழுதி இயக்கியிருக்கிறார்.



அனைவரையும் அவசியம் பாராட்ட வேண்டும்.........  

Friday, 18 May 2012

மலை மருந்தீஸ்வரர் கோவில்

மலை மருந்தீஸ்வரர் கோவில் சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் தாலுகாவில்,ஏரியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.









































ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...